மூடுக

பாலுற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத்துறை

பால்வளத்துறை, நலிவடைந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய விவசாய பெருமக்களுக்கு வாழ்வாதாரத்தை தரக்கூடிய துறையாக மட்டுமல்லாது, மக்களுக்கு சரிவிகித சத்துணவான பாலை உற்பத்தி செய்யும் உன்னதத் துறையாகவும் திகழ்கிறது. பால் உற்பத்தியில் பற்றாக்குறை நாடாக இருந்த இந்தியா, தற்சமயம் தன்னிறைவடைந்து உலக அளவில் பால் உற்பத்தியில் முதலிடம் வகிப்பது பெருமைக்குரியதாகும். மாண்புமிகு முதல்வர் அவர்களின் சீரிய தலைமையின் கீழ் பால் உற்பத்தியில் தமிழகம் 8வது இடத்தை அடைந்து, இரண்டாவது வெண்மைப் புரட்சியை நோக்கி விரைவாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. துணைப்பதிவாளர் பால்வளம் அலுவலக, ஆணையர் பாலுற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது.

  1. துறையின்பெயர் மற்றும் அலுவலக முகவரி:

    பாலுற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத்துறை
    துணைப்பதிவாளர்(பால்வளம்) அலுவலகம்,
    பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
    2ஆம் தளம் பல்துறை அலுவலக வளாகம்,
    ஜெயங்கொண்டம் ரோடு,
    அரியலூர் – 621 704.
    தொலைப்பேசி எண்: 04329 299116
    மின்னஞ்சல்:drdariyalur[at]gmail[dot]com

  2. துறைத்தலைமையின் பெயர்:

    ஆணையர்,
    பாலுற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத்துறை,
    மாதவரம் பால்பண்ணை,
    சென்னை – 600 051.

  3. நோக்கம்:

    1. பால் உற்பத்தியாளர்கள் வழங்கும் பாலுக்கு இலாபகரமான விலை வழங்குவதை உறுதி செய்தல்.
    2. நியாயமான விலையில் நுகர்வோர்களுக்கு பதப்படுத்தப்பட்ட திரவ பால் கிடைப்பதை உறுதி செய்தல்.
    3. நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை ஏற்படுத்துவதன் மூலம் பால் கூட்டுறவு கட்டமைப்பின் நம்பகத்தன்மையை உறுதி செய்தல்.
    4. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வரையறை செய்துள்ள படி பால் மற்றும் பால் பொருட்களின் தரத்தினை உறுதி செய்தல்.
    5. அமைப்புசாரா பால் பண்ணை துறையினை அமைப்புசார்ந்த துறையாக கொண்டுவருதல்.
    6. பால் உற்பத்தியாளர்களின் கறவை மாடுகளுக்கு பல்வேறு உள்ளீடுகளான கால்நடைத்தீவனம், கலப்பு தீவனம் மற்றும் கால்நடை மருத்துவ வசதிகள் வழங்குவதை உறுதி செய்தல்.
  4. செயல்பாடுகள்:

    1. புதிய பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களை பதிவு செய்தல்.
    2. செயலற்ற சங்கங்களை மறுமலர்ச்சி செய்தல்.
    3. பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களை ஆய்வு செய்தல்.
    4. பிரச்சனைகளை தீர்த்து வைத்தல்.
    5. கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகக் குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டுறவு சங்க தேர்தல் நடத்துதல்.
    6. பொது மக்களின் நலன் கருதி உரிய அறிவுரைகளை வழங்குதல்.
  5. உத்திகள்:

    பால் வளத்துறையின் நோக்கங்களை அடைய பின்வரும் உத்திகள் பின்பற்றப்பட்டுள்ளன:

    1. பால் கொள்முதல் விலை அவ்வப்போது அரசால் திருத்தப்பட்டு, பால் உற்பத்தியாளர்களுக்கு இலாபகரமான விலை வழங்குவதை உறுதி செய்தல்.
    2. பால் விற்பனை விலையும் அவ்வப்போது அரசால் திருத்தப்பட்டு நுகர்வோர்களுக்கு நியாயமான விலையில் பால் கிடைப்பதை உறுதி செய்தல்.16.05.2021 முதல் ஆவின் பால் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.3/- குறைத்து மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
    3. பால் கூட்டுறவு சங்கங்களுக்கு அவ்வப்போது தேர்தல் நடத்தப்படுகிறது.
    4. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் சட்டப்பூர்வ தரநிலைகளின் படி பால் கொள்முதல் மற்றும் செயலாக்கத்தின் பல்வேறு கட்டங்களில் பாலில் கலப்படத்தைக் கண்டறிவதற்கான தரசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.
    5. அனைத்து கிராமங்களையும் உள்ளடக்கி அதிக எண்ணிக்கையிலான தொடக்க பால் கூட்டுறவு சங்கங்களை அமைத்து அதிக எண்ணிக்கையிலான பால் உற்பத்தியாளர்களை கூட்டுறவு அமைப்பின் கீழ் கொண்டு வருதல்.
    6. பால் கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்களுக்கு பால் வளர்ப்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல்.
    7. அனைத்து பால் பண்ணைகளிலும் ஒருங்கிணைந்த பால் மேலாண்மை அமைப்பை நிறுவுதல்.
    8. கூட்டுறவு நிறுவனங்கள் பால் விற்பனையை அதிகரிப்பது, மின்னணு பால் விற்பனை மற்றும் நுகர்வோர் நம்பிக்கையை உறுதி செய்திட 24 மணி நேர வாடிக்கையாளர் பராமரிப்பு மற்றும் ஆதரவு மையம் மூலம் பெறப்படும் நுகர்வோர் குறைகளைத் தீர்ப்பது.

துணைப்பதிவாளர்(பால்வளம்)
அரியலூர்.