மூடுக

நெடுஞ்சாலைத்துறை

  1. அரியலூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைகள், கோட்டப் பொறியாளர் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் (ம) பராமரிப்பு அலகின் மூலமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
  2. தொலைபேசி எண்-04329-220064
  3. நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் (ம) பராமரிப்பு அலகு தலைமைப் பொறியாளர் (நெ), கட்டுமானம் (ம) பராமரிப்பு, சென்னை அவர்களின் தலைமையின் கீழ் இயங்கி வருகிறது. இக்கோட்டத்தின் மூலமாக ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம்  (CRIDP) முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டம் (CMRDP) ஆகியவற்றின் மூலம் சாலைகளை அகலப்படுத்தி மற்றும் மேம்பாடு செய்தல்  பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  மேலும் திட்டம் சாராப் பணிகள் மூலம் சாலைகள் சீர்செய்யப்பட்டு வருகிறது.
  4. சாலைகளை பராமரித்தல் : சாலைகளில் அவ்வப்போது ஏற்படும் நொடிகளை சீர்செய்தல் கல்வெர்ட் மற்றும் பாலங்களில் நீர் வழிப்பாதையை சீர்செய்தல் சாலை புருவப்பகுதிகளை மண் நிரப்பி சீர்செய்தல் முட்செடிகளை அப்புறப்படுத்துல் மற்றும் பாலங்கள், கல்வெர்ட்களில் வர்ணம் பூசுதல் போன்ற பணிகள் ஆண்டு பராமரிப்பு பணிகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
  5. அரியலூர் மாவட்டத்தில் இன வாரியாக சாலைகளின் விவரம்
    வ.எண். சாலையின் வகை நீளம் (கி.மீ)
    1. தேசிய நெடுஞ்சாலைகள் 113.052
    2. மாநில நெடுஞ்சாலைகள் 157.440
    3. மாவட்ட முக்கிய சாலைகள் 131.190
    4. மாவட்ட இதர சாலைகள் 719.159
    5. கரும்பு அபிவிருத்தி திட்ட சாலைகள் 55.615
  6. கடந்த ஆண்டில் CRIDP மற்றும் CMRDP திட்டத்தின் கீழ் 48 சாலைப்பணிகள்69 கி.மீ நீளத்திற்கு 210.00 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணிகள்  நடைபெற்று வருகிறது.
  7. அரியலூர் மாவட்டத்தில் சுண்ணாம்பு கல் சுரங்கங்கள் மற்றும் சிமெணட் தொழிற்சாலை இருப்பதால் கனரக வாகனங்களின் போக்குவரத்திற்கு ஏற்ப வகையில்  சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

கோட்டப் பொறியாளர் (நெ),
கட்டுமானம் மற்றும் பராமரிப்பு,
அரியலூர்.