மூடுக

வனக்கோட்டம்

அரசாணை எண் 168 சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை (FR.SPL-B) துறை நாள் 29.11.2011-ன்படி அரியலூர் வனக்கோட்டம் 27.04.2012 முதல் துவக்கப்பட்டது.
அய்யலூர் இடைபடுகாடுகள் கோட்டத்தில் ஒப்பளிக்கப்பட்ட பணியிடங்கள் மறுபகிர்வு மூலம் இக்கோட்டத்திற்கு ஒதுக்கப்பட்டது. இக்கோட்டம் அரியலூர் வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்டு செயல்படுகிறது. தலைமை வனப்பாதுகாவலர் திருச்சி மண்டலத்தின் கீழ் இக்கோட்டம் செயல்படுகிறது.

இக்கோட்ட கட்டுப்பாட்டில் கீழ்க்காணும் சரகங்கள் உள்ளது.

  1. அரியலூர் வனச்சரகம்
  2. அரியலூர் சமூகக்காடுகள் சரகம்
  3. அரியலூர் டேப் சரகம்
தமிழ்நாடு காடு வளர்ப்பு திட்ட கிராமங்கள் விபரம்

கீழ்காணும் டேப் திட்ட கிராமங்கள் இக்கோட்டத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

வ. எண் கிராமங்களின் பெயர் சரகத்தின் பெயர்
1 1998 வங்காரம் அரியலூர் சமூகக்காடுகள் சரகம்
2 2008 கல்லமேடு அரியலூர் சரகம்
3 2008 நரசிங்கபுரம் அரியலூர் சரகம்
4 2008 வேள்விமங்கலம் அரியலூர் சரகம்
காப்புக்காடுகளின் விபரம்:

இக்கோட்டத்தில் 55 காப்புக்காடுகள் உள்ளது. இதில் 5 காப்புக் காடுகள் மட்டும் இரண்டு பீட்டுகளாக பிரிக்கப்பட்டு அரியலூர் வனச்சரகம் கட்டுப்பாட்டில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அரியலூர் வனச்சரக கட்டுப்பாட்டில் உள்ள பீட்டின் விபரங்கள்:
பீட் காப்புக்காடுகளின் பெயர் மொத்த பரப்பு எக்டரில்
குருவாடி குருவாடி பிட் I – IV 49.99
சாத்தம்பாடி பிட் I – XI 121.00
தத்தனூர் குழுமூர் 80.94
குழுமூர் விரிவாக்கம் 113.13
வங்காரம் 413.00
மொத்தம் 778.06

மீதம் உள்ள 50 காப்புகாடுகளின் பரப்பு 8355.51 எக்டர் தமிழ்நாடு அரசு வனத்தோட்டக் கழகத்தின் கட்டுப்பாட்டில் நேரடியாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த காப்புகாடுகள் புதுக்கோட்டை மண்டலம் மற்றும் விருத்தாசலம் மண்டலம் ஆகிய இரு மண்டல மேலாளர்களால் நிர்வகிக்கப்படுகிறது.

கரைவெட்டி பறவைகள் சரணாலயம்

வேட்டைக்குடி நீர் பாசன ஏரியில் உலகில் பல்வேறு இடங்களிலிருந்து பறவைகள் இடம் பெயர்ந்து வசிப்பதற்காகவும் பாதுகாப்பு அளிப்பதற்காகவும் கரைவெட்டி பறவைகள் சரணாலயம் 1999-ம் வருடம் அறிவிக்கப்பட்டது. இச்சரணாலயத்தில் 82 நீர் பறவைகள் உட்பட 203 பறவை இனங்கள் கொண்ட மாநிலத்தின் பெரிய சரணாலயம் ஆகும். இச்சரணாலயத்தில் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை 80-க்கும் மேற்பட்ட நீர்ப்பறவைகள் இனங்கள் வந்து செல்கின்றன. இச்சரணாலயத்தில் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி செல்லும் பறவைகள் உணவிற்காகவும், இனபெருக்கத்திற்காகவும் வருகின்றன. மக்கள் இச்சரணாலயத்திற்கு வந்து பறவைகளை காண சிறந்த காலம் நவம்பர் முதல் டிசம்பர் வரை ஆகும்.

இருப்பிடம்:

கரைவெட்டி பறவைகள் சரணாலயம் தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டம் (அரியலூரிலிருந்து சுமார் 20 கி.மீ.) தொலைவில் அமைந்துள்ளது. இதன் GPS குறியீடு 79o 2’ 6.56” E and 79o 3’ 26.2” E longitude and 10o 58’ 12.19” N and 10o 58’ 50” N latitude 453.71.5 எக்டர் பரப்பளவில் சூழ்ந்துள்ளது. இச்சரணாலயத்தை சுற்றி கீழகாவட்டான்குறிச்சி, கரைவெட்டி, கோவில்எசனை, சுத்தமல்லி (வடக்கு) சாத்தமங்கலம், வெங்கனூர் மற்றும் வெற்றியூர் கிராமங்கள் உள்ளன.

சரணாலயத்திற்கு நீர் வழங்கும் ஆதாராங்கள்:

விவசாய பயன்பாட்டிற்கு நீர் இணைப்புகளைக் கொண்ட பாசன ஏரி உள்ளது. இதில் ஜனவரி முதல் அக்டோபர் வரை வடகிழக்கு பருவ மழை காலத்திலும், டிசம்பரில் இருந்து மேட்டூர் அணையில் இருந்து வரும் நீர், புள்ளம்பாடி கால்வாய் வழியாக கரைவெட்டி பறவைகள் சரணாலய ஏரியை வந்தடைகிறது.

கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தின் பல்லுயிர் தாவரங்கள் (Flora)

கரைவெட்டி பறவைகள் சரணாலயமானது அடிப்படையில் பாசன ஏரியாகும். இச்சரணாலயத்தில் இயற்கையான வனங்கள் ஏதும் இல்லை. சமூக காடுகள் வனக்கோட்டம் மூலம் 1981 முதல் 1988 வரையிலான காலக்கட்டங்களில் கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தின் மேற்கு கரையோரப் பகுதியில் கருவேலத் தோட்டங்கள் எழுப்பப்பட்டன. இவ்வாறு எழுப்பப்பட்ட கருவேல் மரங்களில் கரைவெட்டி பறவைகள் சரணாயலத்திற்கு வருகைத் தரும் open bill stork, White Ibis போன்ற பறவைகள் தங்குவதற்கும் கூடுகட்டுவதற்கும் உறுதுணையாக உள்ளன.

கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தின் பல்லுயிர் உயிரினங்கள் (Fauna)

கரைவெட்டி பறவைகள் சரணாலயமானது இடம்பெயர்ந்து வரும் பறவைகளுக்கு உணவு அளிப்பதற்காக சுத்தமான நீர் கொண்ட சரணாலயங்களில் தமிழகத்திலேயே மிக முக்கியமானது ஆகும். இச்சரணாலயத்தில் 188 வகையிலான பறவைகள் 82 நீர்ப்பறவைகள் உட்பட அடையாளம் காணப்பட்டுள்ளன.
எந்நேரத்திலும் சுமார் 45 விதமான பறவைகளை காண இயலும். இச்சரணாலயத்திற்கு வந்து செல்லும் பறவைகளில் முக்கியமான பறவை அழியக்கூடிய நிலையில் இருக்கும் வரித்தலை வாத்து (Bar headed goose) ஆகும். இவ்வரித்தலை வாத்து பறவை எவரெஸ்ட் சிகரத்தை கடந்து இச்சரணாலயத்திற்கு வந்து செல்கிறது. இப்பறவையானது பிப்ரவரி மாத கடைசியில் இச்சரணாலயத்திற்கு வந்து மே மாத கடைசி வரை இருக்கும். இப்பறவை H1, N1 வைரசினை தன்னிடத்தில் கொண்டிருக்கும்.

சுற்றுலா மேம்பாட்டு பணிகள்:

2014-2015-ம் ஆண்டில் சுற்றுலா துறை மூலம் ஒதுக்கப்பட்ட ரூபாய் 30.00 லட்சத்தில் செயல் விளக்க கூடம் ஒன்று கட்டப்பட்டது.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் விவரங்கள்:

மாண்புமிகு முந்தைய தமிழக முதலமைச்சர் அவர்களால் 11.12.2013 முதல் 13.12.2013 வரையிலான மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை உயர் அலுவலர்களுடனான கூட்டத்தில் அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் கரைவெட்டி பறவைகள் சரணாலய மேம்பாட்டிற்கு ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு அறிவிப்பு செய்யப்பட்டது. ஆனால் தொகை ரூபாய் 20.00 இலட்சம் மட்டும் விடுவிக்கப்பட்டு அத்தொகை 2015-16ம் ஆண்டில் செலவு செய்யப்பட்டது. தற்போதைய தமிழக முதலமைச்சர் அவர்கள் அரியலூரில் 04.08.2017-ந் தேதி நடைபெற்ற, காலஞ்சென்ற முன்னாள் முதலமைச்சர் M.G.ராமச்சந்திரன் அவர்களின் நூற்றாண்டு விழாவில் கரைவெட்டி பறவைகள் சரணாலய மேம்படுத்தும் பணிக்கு தேவைக்கேற்ப நிதி ஒதுக்கப்படும் என அறிவித்தார்.

1. துறையின் பெயர் & முகவரி : மாவட்ட வன அலுவலகம்,
2வது தளம், பலதுறை வளாகம்,
ஜெயங்கொண்டம் சாலை,
அரியலூர் – 621 704.
2. துறைத் தலைவர் (ம) தொடர்பு எண் : மாவட்ட வன அலுவலகம்,
அரியலூர் வன பிரிவு,
அரியலூர்.
தொலைபேசி : 04329 – 299195.
3. நிர்வாக அமைப்பு : Admin Structure
4. திட்டங்கள் :
  1. தமிழ்நாடு பசுமை இயக்கம் (நாற்றாங்கல் உற்பத்தி மற்றும் நடவு பணி)
  2. நபார்டு திட்டம் (நாற்றாங்கல் உற்பத்தி, நடவு மற்றும் கட்டிடப்பணிகள்)
  3. கேம்பா திட்டம் (கட்டிடப்பணிகள் மற்றும் பராமரிப்பு)
  4. மத்திய மாநில பங்களிப்பு திட்டம் (கரைவெட்டி பறவைகள் சரணாலய மேம்பாட்டு பணிகள்)
5. சென்ற ஆண்டு இலக்கு மற்றும் சாதனை (2021) :
  1. TNMSGCF Scheme – 191800 மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வேளாண்மை துறை மூலம் நடவு செய்யப்பட்டுள்ளது.
  2. மத்திய மாநில பங்களிப்பு திட்டத்தில் ரூ.18.30 இலட்சத்தில் கரைவெட்டி பறவைகள் சரணாலய மேம்பாட்டு பணிகள்செய்யப்பட்டுள்ளது
  3. PMKKKY திட்டத்தில் காப்புகாடுகளில் வன விலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும்பொருட்டு 10 தண்ணீர் தொட்டிகள் மற்றும் 5 கசிவு நீா்குட்டைகள் கட்டப்பட்டுள்ளது.
  4. ஒருங்கிணைந்த வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் குடியிருப்பு கட்டிடம் ரூ.19.74 இலட்சத்தில் கட்டப்பட்டுள்ளது
6. சாதனைகள் : TNMSGCF திட்டம் மூலம் 191800 நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வேளாண்மை துறை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மத்திய மாநில பங்களிப்பு திட்டத்தின் மூலம் கரைவெட்டி பறவைகள் சரணாலய மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டுள்ளது.
PMKKKY திட்டத்தில் காப்புகாடுகளில் வன விலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும்பொருட்டு 10 தண்ணீர் தொட்டிகள் மற்றும் 5 கசிவு நீா்குட்டைகள் கட்டப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பசுமை இயக்கம் நாற்றாங்கால்

Green Tamil Nadu Mission NurseryGreen Tamil Nadu Mission Nursery