மூடுக

மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்டத்தின் அறிமுகம்

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்டத்தின் அணுகுமுறையின் மூலம் மாநில அளவில், மாவட்ட அளவில் எச்.ஐ.வி நோய்த்தொற்றின் பாதிப்பு மற்றும் அளவில் அடிப்படையில் உயர் அளவு மற்றும் குறைந்த அளவு என வகைப்படுத்தப்பட்டு, 2009-10 ஆம் ஆண்டில் 22 மாநிலங்களில், 189 வகை ‘A” மற்றும் “B” மாவட்டங்களில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகுகள் நிறுவப்பட்டது. அரியலூர் மாவட்டம் ‘C” மாவட்டமாக வகைப்படுத்தப்பட்டு 2011-ம் ஆண்டு நிறுவப்பட்டது.

மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் செயல்பாடுகள்

  • நம்பிக்கை மையம், சுகவாழ்வு மையம், ஏ.ஆர்.டி மையம், இரத்த வங்கி, இளைப்பாறும் மையம்/கவனிப்பு, ஆதரவு மையம் ஆகியவை குறித்த கட்டுப்பாடு குழுவின் குறிகாட்டிகளை மதிப்பாய்வு செய்யவும்,
  • மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு குழுவின் காலாண்டு கூட்டம், தொடர்புடைய துறைகளில் எச்.ஐ.வி குறித்த விழிப்புணர்வு,
  • எச்.ஐ.வி உடன் வாழ்பவர்களுக்கும் (PLHIV) நோய் தொற்று பரவும் அதிக ஆபத்து உள்ள குழுவினருக்கும் (HRG) ஆகியோருக்கு தமிழக அரசால் வழங்கப்படும் சமூக நலன் திட்டங்களை பெற்றுத்தருதல்,
  • மாவட்ட அளவில் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்டத்தின் செயலாக்கத்தினை அடைதல்
  • எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோய் தடுப்பு பராமரிப்பு, ஆதரவு மற்றும் சிகிச்சை சேவைகளில் ஆதார வளங்களைப் பயன்படுத்துதல்.

சமூக நலத்திட்டங்கள்

பின்தங்கிய குடிமக்களுக்கு சமூகப் பாதுகாப்பை வழங்குவதற்காக மாநில மற்றும் மத்திய அரசுகள் பல்வேறு திட்டங்களைத் தொடங்கியுள்ளன. எச்.ஐ.வி உடன் வாழ்பவர்களுக்கும் (PLHIV)இ நோய் தொற்று பரவும் அதிக ஆபத்து உள்ள குழுவினருக்கும் (HRG) போதிய அளவு கல்வியறிவு இல்லாமை, புறக்கணித்தல் இயலாமையின் காரணமாக சுமூகமான முறையில் சமூக பாதுகாப்புத் திட்டங்களை மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் வாயிலாக பெற்றுத்தருதல்.

தகவல், கல்வி தொடர்பு பிரச்சாரம்/செஞ்சுருள் சங்கம்

மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு செஞ்சுருள் சங்கத்துடன் இணைந்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டுவருகிறது. மாவட்ட அளவில் சுகாதார துறை அதிகாரிகளுடன் தொடர்புடைய துறைகள், திட்டத்தின் பங்குதாரர்கள் ஆகியோருடன் இணைந்து நம்பிக்கை மையம், சுக வாழ்வு மையம், எச்.ஐ.வி மற்றும் காசநோய் ஆகியோர்களை ஒருங்கிணைத்து எச்.ஐ.வி தொடர்பான பிரச்சனைகளுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளுதல்.

சமூக நலத்திட்டங்கள்

பின்தங்கிய குடிமக்களுக்கு சமூகப் பாதுகாப்பை வழங்குவதற்காக மாநில மற்றும் மத்திய அரசுகள் பல்வேறு திட்டங்களைத் தொடங்கியுள்ளன. எச்.ஐ.வி உடன் வாழ்பவர்களுக்கும் (PLHIV)இ நோய் தொற்று பரவும் அதிக ஆபத்து உள்ள குழுவினருக்கும் (HRG) போதிய அளவு கல்வியறிவு இல்லாமை, புறக்கணித்தல் இயலாமையின் காரணமாக சுமூகமான முறையில் சமூக பாதுகாப்புத் திட்டங்களை மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் வாயிலாக பெற்றுத்தருதல்.

தகவல், கல்வி தொடர்பு பிரச்சாரம்/செஞ்சுருள் சங்கம்

மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு செஞ்சுருள் சங்கத்துடன் இணைந்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டுவருகிறது. மாவட்ட அளவில் சுகாதார துறை அதிகாரிகளுடன் தொடர்புடைய துறைகள், திட்டத்தின் பங்குதாரர்கள் ஆகியோருடன் இணைந்து நம்பிக்கை மையம், சுக வாழ்வு மையம், எச்.ஐ.வி மற்றும் காசநோய் ஆகியோர்களை ஒருங்கிணைத்து எச்.ஐ.வி தொடர்பான பிரச்சனைகளுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளுதல்.

ஒருங்கிணைந்த ஆலோசனை மற்றும் பரிசோதனை மையம்

ஒருங்கிணைந்த ஆலோசனை மற்றும் பரிசோதனை மையம் என்பது தடுப்பு மற்றும் பராமரிப்பில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொடர்பான பல சேவைகளுக்கான நுழைவுவாயில். அரியலூர் மாவட்டத்தில் ஆலோசனை மற்றும் பரிசோதனை சேவைகளை வழங்க 10 நம்பிக்கை மையங்கள் செயல்பட்டுவருகின்றது. மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் செயல்படும் நம்பிக்கை மையம் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சென்னையால் (TANSACS) ஆதரிக்கப்படுகிறது. மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை 1 மற்றும் அரசு மருத்துவமனைகள், வட்டார அளவிலான அரசு சமுதாய சுகாதார மையங்கள் (ஆண்டிமடம், கடுகூர், குமிழியம், மீன்சுருட்டி, திருமானூர் மற்றும் த. பழூர்) தேசிய ஊரக சுகாதார பணி – NRHM ஆல் ஆதரிக்கப்பட்டுவருகிறது. மேலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நம்பிக்கை மையத்தின் சேவைகளையும், 3 தனியார் மருத்துவமனைகளில் ஆலோசனை மற்றும் பரிசோதனை சேவைகளை வழங்கிவருகிறது.

அரியலூர் மாவட்டத்தில் 10 ஒருங்கிணைந்த நம்பிக்கை மையங்கள் 6 வட்டாரங்களில் செயல்பட்டுவருகிறது (அரியலூர், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், செந்துறை, த. பழூர் மற்றும் திருமானூர்).

  • மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை – அரியலூர்
  • வட்டார மருத்துவமனைகள் – செந்துறை, ஜெயங்கொண்டம், உடையார்பாளையம்
  • வட்டார அரசு சமுதாய நல மையங்கள் – ஆண்டிமடம், கடுகூர், குமிழியம், மீன்சுருட்டி, திருமானூர் மற்றும் த. பழூர்)

Strucutre-Tamil

சுகவாழ்வு மையம்

அரியலூர் மாவட்டத்தில் 2 சுகவாழ்வு மையங்களும்/ 8 துணை சுகவாழ்வு மையங்களும் செயல்பட்டுவருகின்றது.

முதன்மை மருத்துவ அலுவலர்/ வட்டார மருத்துவ அலுவலர்

மருத்துவமனை கண்காணிப்பாளர்/ இருக்கை மருத்துவ அலுவலர்

ஆலோசகர்

  • மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரியலூர்.
  • மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, ஜெயங்கொண்டம்
  • அரசு மருத்துவமனை – செந்துறை
  • அரசு மருத்துவமனை – உடையார்பாளையம்
  • அரசு சமுதாய நல மையம் – ஆண்டிமடம்
  • அரசு சமுதாய நல மையம் – கடுகூர்
  • அரசு சமுதாய நல மையம் – குமிழியம்
  • அரசு சமுதாய நல மையம் – மீன்சுருட்டி
  • அரசு சமுதாய நல மையம் – திருமானூர்
  • அரசு சமுதாய நல மையம் – த. பழூர்

இரத்த மாற்று சேவை

  • இரத்த வங்கி
  • இரத்த சேமிப்பு அலகுகள்
இரத்த வங்கி இரத்த சேமிப்பு அலகுகள்
மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரியலூர்
  • மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை – ஜெயங்கொண்டம்
  • அரசு சமுதாய நல மையம் – ஆண்டிமடம்
  • அரசு சமுதாய நல மையம் – திருமானூர்
  • அரசு சமுதாய நல மையம் – மீன்சுருட்டி
  • அரசு சமுதாய நல மையம் – கடுகூர்
  • அரசு சமுதாய நல மையம் – த. பழூர்

இரத்த வங்கி

அரியலூர் மாவட்டத்தில் இரத்த வங்கி, மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டுவருகிறது.

இரத்த வங்கியின் அடிப்படை செயல்பாடுகள்

  • இரத்தக் கொடையாளர்களை அடையாளம் காணுதல்
  • இரத்த சேகரிப்பு, பரிசோதனை, சேமிப்பு மற்றும் இரத்தக் கூறுகளின் விநியோகம்
  • ஆய்வக ஆய்வு மேற்கொள்ளுதல்
  • இரத்தம், இரத்த மாதிரிகளின் பயன்பாட்டில் பங்கேற்பு
  • சுகாதாரப்பணியாளர்களுக்கு கற்பித்தல், பயிற்சி அளித்தல், திட்டத்தில் ஈடுபடுத்துதல் மற்றும் சேவைகளை ஒருங்கமைத்தல்.

இரத்த வங்கியில் மேற்கொள்ளப்படும் கட்டாய பரிசோதனைகள்

  • இரத்த வகைப்பாடு மற்றும் வகைகள் (Grouping & Types)
  • ஆன்டிபாடி பரிசோதனை
  • ஹீமோகுளோபின்
  • எச்.ஐ.வி I & II ஆன்டிபாடிஸ்
  • ஹெப்படைடிஸ் பி ஆன்டிஜென்
  • ஹெப்படைடிஸ் சி ஆன்டிபாடி
  • மலேரியா ஒட்டுண்ணி
  • சிபிலிஸ் அல்லது விடிஆர்எல்

ஏ.ஆர்.டி கூட்டு சிகிச்சை மையம் / இலவச சட்ட உதவி மையம்

இந்திய அரசாங்கம் இலவச ஏ.ஆர்.டி கூட்டு சிகிச்சை முறையை 2004 ஏப்ரல் 1 ஆம் தேதியன்று தொடங்கியது. பராமரிப்பு, ஆதரவு மற்றும் சிகிச்சை தேவைகள் நோய்த்தொற்றின் கட்டத்தைப்பொறுத்து மாறுபடும். எச்.ஐ.வி-ஆல் பாதிக்கப்பட்ட ஒருவர் முதல் சில ஆண்டுகளுக்கு அறிகுறியற்றவராக இருக்கிறார். ஆறு முதல் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு அறிகுறிகள் வெளிப்படும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால், பல்வேறு சந்தர்ப்பவாத நோய்களுக்கு எளிதில் பாதிக்கப்படுகிறார். இந்த கட்டத்தில் எச்.ஐ.வி ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏ.ஆர்.டி கூட்டு மருத்துவ சிகிச்சை மற்றும் உளவியல் (மனரீதியான) சமூக ஆதரவு ஆகியவை ஏ.ஆர்.டி கூட்டு சிகிச்சை மையத்தின் மூலம் வழங்கப்படும். பல்வேறு சந்தர்ப்பவாத நோய்களையும், சிகிச்சைக்கான நடவடிக்கை மேற்கொள்ளும்போது நீண்ட காலம் வாழ்வதை உறுதி செய்து சிறந்த வாழ்க்கைத் தரத்தை அவர்களுக்கு அளிக்கிறது.

அரியலூர் மாவட்டத்தில், ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் செயல்பட்டுவருகிறது.

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்டம் – I (1992-99)

நோக்கங்கள்

  • அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் செயல்பாடுகளை தொற்றுநோய் உள்ள மையங்களில் சிறப்பு கவனம் செலுத்துகிறது.
  • எச்.ஐ.வி பரவுதல் குறித்த முழுமையான பொது விழிப்புணர்வை அடைதல்.
  • உயர் ஆபத்துக் குழுக்களிடையே சுகாதார மேம்பாட்டினை உருவாக்குதல்.
  • இரத்த பரிமாற்றத்திற்காக சேகரிக்கப்பட்ட அனைத்து இரத்த அலகுகளையும் பரிசோதிக்க
  • தொழில்முறையிலான இரத்ததான கொடையை குறைத்தல்.
  • மருத்துவ மேலாண்மை, சுகாதாரக் கல்வி மற்றும் ஆலோசனை ஆகியவற்றில் திறன்களை மேம்படுத்துதல்.
  • எச்.ஐ.வி தொற்றுள்ளதாக கண்டறியப்பட்ட நபா;கள் மற்றும் நோய் முற்றிய நிலையில் உள்ள எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உளவியல் ஆலோசனை வழங்குதல்.
  • பாலியல் ரிதியான தொற்றுகள் இனப்பெருக்க பாதை நோய்த்தொற்றுக்கான கட்டுப்பாட்டை வலுப்படுத்துதல்.
  • நாட்டில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்றுநோயின் வளர்ச்சியினை கண்காணிக்க.

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்டம் – II (1999-2006)

நோக்கங்கள்

  • எச்.ஐ.வி தொற்று மற்றும் பரவக்கூடிய அதிக ஆபத்து உள்ள குழுவினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலிருந்த கவனத்தினை அவர்களின் நல் நடத்தையை மாற்றுவதில் கவனம் செலுத்துதல்.
  • தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்புக்கு மாநிலங்கள், நகராட்சிகளில் புதிதாக சேவை மையங்களை ஏற்படுத்தி, எச்.ஐ.வி பரவல் தடுப்பு செயல்பாடுகளை எளிதாக்குகிறது.
  • தன்னார்வ ஆலோசனை மற்றும் சோதனைகளை ஊக்குவிப்பதன் மூலம் மனித உரிமைகளை பாதுகாத்தல்.
  • வருடாந்திர மதிப்பாய்வுகள் மற்றும் நடந்துகொண்டிருக்கும் கட்டமைக்கப்பட்ட மற்றும் சான்றுகள் அடிப்படையிலான ஆராய்சிக்கு ஆதரவளிக்கவும், மற்றும்
  • சிறப்பாக நிர்வகிக்கப்படும் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் மேம்படுத்தப்பட்ட மருந்து மற்றும் உபகரணங்கள் கொள்முதல் போன்ற மேலாண்மை சீர்திருத்தங்களை ஊக்குவித்தல்.

தேசிய எய்டஸ் கட்டுப்பாடு திட்டம் – II -ன் நோக்கம்

எச்.ஐ.வி நோய்த்தொற்றின் பரவலைக் குறைப்பதில் இந்தியாவின் திறனை வலுப்படுத்துவதும், நீண்ட காலத்திற்கு எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோய்க்கு பதிலளிப்பதும்.

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்டம் – III (2006-11)

இலக்குகள்

  • 2012-க்குள் நாட்டில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்று நோயை நிறுத்துதல் மற்றும் மாற்றியமைத்தல்.
  • மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு – உருவாக்கப்பட்டது

மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு

அரியலூர் மாவட்டத்தில் 2011-ம் ஆண்டு முதல் மாவட்ட ஆட்சியரக முதல் தளத்தில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் வழிகாட்டுதலின்படி செயல்பட்டுவருகிறது. தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் திட்ட இயக்குநர்/உறுப்பினர் செயலர், சென்னை அவர்களால் தேர்வு செய்யப்பட்ட பணியாளர்கள் மாவட்ட அளவில் மாவட்ட நிர்வாகத்தின் கீழ், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலுவலர்/துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அவர்களின் வழிகாட்டுதலின்படி பணிபுரிந்துவருகிறார்கள்.

மாவட்ட அளவில் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

மாவட்ட திட்ட மேலாளர்
மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு
அறை எண்: 129, முதல் தளம்,
மாவட்ட ஆட்சியகரம், அரியலூர் – 621 704.
தொலைபேசி எண் : 04329 – 228100