அரியலூா் மாவட்டத்தில் தோட்டக்கலைப்பயிர்கள்
அரியலூா் மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 40000 எக்டா் பரப்பில் பழங்கள், காய்கறிகள், மலா்கள், நறுமண பயிர்கள், மூலிகை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.
தோட்டக்கலைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள்
தேசிய வேளாண் வளர்ச்சி்த்திட்டம் – 2017-18
தமிழ்நாடு அரசு தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை 9 சதம் முதல் 10 சதம் அதிகரிக்க தோட்டக்கலை சார்ந்த திட்டங்களை விவசாயிகள் அறுவடைதிறன் கொண்ட பயிர்களுக்கு மாற்று பயிராக தோட்டக்கலைப்பயிர்களை பயிரிடுவதன் மூலம் விவசாயிகளுக்கு குறைந்த செலவில் அதிக வருமானம் ஈட்டித் தருவதோடு அவா்களது வாழ்க்கைத்தரமும் உயா்கிறது.
தேசிய வேளாண் வளா்ச்சி திட்டத்தின் கீழ் முக்கனி அபிவிருத்தி திட்டத்தில் பலா கன்றுகள், காய்கறி விதைகள், பூச்சி மேலாண்மைக்கான இனக்கவா்ச்சிப் பொறிகள் வழங்குதல், பண்ணை சாரா துறைகளுக்கு பொருளாதார தோட்டப்பயிர்கள் வழங்குதல், வீட்டுத்தோட்டக் காய்கறி தளைகள் மற்றும் மருத்துவச் செடிகள் வழங்குதல் அறுவடைக்கு பிந்தைய பயன்பாட்டு உபகரணம் வழங்குதல் ஆகியவற்றிற்கு ரூ.11.22 இலட்சம் நிதி இலக்கீடு பெறப்பட்டு 50 சதம் மானியத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய நீடித்த நிலையான வேளாண் இயக்கம்
அ. தேசிய மானாவாரி பகுதி மேம்பாட்டு திட்டம் – 2017-18 (RAD)
இந்தத்திட்டத்தின் கீழ் மானாவாரி பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் நலனைக் கருத்தில் கொண்டு அவா்களது வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்த விவசாயிகள் தோட்டக்கலை சார்ந்த பண்ணையம் அமைக்க நடப்பாண்டில் 220 எக்டா் பரப்பளவிற்கு ரூ.55 இலட்சத்திற்கு இத்திட்டம் 50 சதவீதம் மானியத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நிழல்வலை அமைத்தல், மண்புழு உர உற்பத்தி தொட்டி மற்றும் மண்புழு உரப்படுக்கை அமைத்தல் ஆகியவை 67.19 இலட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
பிரதம மந்திரி வேளாண்மை நுண்ணீா்ப்பாசனத்திட்டம்
நுண்ணீா்ப்பாசனம் அமைத்தல் -2017-18
நுண்ணீா்ப்பாசன அமைப்பை, விவசாயிகள் தங்கள் வயல்களில் அமைத்துக் கொள்ள தமிழக அரசு மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தி வருகின்றது. இத்திட்டம் 2005-06 ஆம் நிதியாண்டில் துவங்கப்பட்டது நடப்பாண்டிலும் இத்திட்டத்தினை தொடா்ந்து ரூ.808 இலட்சம் நிதியில் 1080 எக்டா் பரப்பளவல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் தோட்டக்கலைப்பயிர்களான காய்கறி பயிர்கள் அனைத்தும், மலா்வகைகள் மற்றும் பழ பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் அளிக்கப்பட உள்ளது.
தேசிய தோட்டக்கலை இயக்கம் -2017-18
அரியலூா் மாவட்டத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கத்திட்டம் 2005-06 ஆம் ஆண்டு முதல் அனைத்து வட்டாரங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் நடப்பு 2017-18 ஆம் நிதியாண்டிற்கு, முந்திரி, வீரிய ஒட்டுரக காய்கறிகள், மிளகாய் மற்றும் மலா்கள் ஆகிய பயிர்களில் புதிய தோட்டங்கள் அமைக்க மானிய விலையில் நடவுச் செடிகள் மற்றும் இடுபொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் நெகிழி நிலப்போர்வை அமைத்தல் நிழல்வலை அமைத்தல் சிப்பம் கட்டும் அறைகள் அமைத்தல், குறைந்த விலையில் வெங்காய சேமிப்பு கிடங்கு அமைத்தல், தேனீ வளா்ப்பு பெட்டிடிகள், சந்தை உள்கட்டமைப்பு அமைத்தல் மற்றும் இயந்திரங்கள் வழங்குதல் முதலான திட்டங்களுக்கும் நடப்பாண்டில் ரூ.199 இலட்சம் நிதியில் 50 சதவீதம் மானியத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்பு முகவரி
தோட்டக்கலை துணை இயக்குனர்.
பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
அரியலூா்.
மின்னஞ்சல் : ddhalr[at]yahoo[dot]in
தொலைபேசி : 9443073157