மூடுக

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் 2 ஆவது கட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 15/12/2025
Mahalir

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னையில் நடைபெற்ற அரசு விழாவில் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” தமிழ்நாட்டின் சாதனை பெண்களின் மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் 2 ஆவது கட்ட விரிவாக்கத்தினை துவக்கி வைத்தார்கள். அரியலூர் மாவட்டம், வாலாஜாநகரம் அன்னலட்சுமி ராஜபாண்டியன் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவின் காணொளிக் காட்சி நேரலை ஒளிபரப்பு நிகழ்ச்சியில் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் கலந்துகொண்டு 16,525 மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான வங்கி பற்று அட்டைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். (PDF 94KB)
Mahalir
Mahalir
Mahalir