மூடுக

வட்டார போக்குவரத்து அலுவலகம்

வட்டார போக்குவரத்து அலுவலகம் 17.12.2008 அன்று முதல் தொடங்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. இவ்வலுவலகம் கீழப்பழூர், திருச்சி சாலையில் அரசு கட்டிடத்தில் 19.02.2014 முதல் இயங்கி வருகிறது.

இவ்வலுவலகத்திற்கு பதிவுத் தொடர், “TN61” என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து ஆணையர், சென்னை – இதன் துறைத் தலைவர் ஆவார்.

மாவட்ட ஆட்சியர், அரியலூர், வட்டார போக்குவரத்து ஆணையர் ஆவார்.

வட்டார போக்குவரத்து அலுவலர், இவ்வாணையத்தின் செயலாளராக செயல்படுகிறார்.

கீழ்க்காணும் பணிகள் இவ்வலுவலகத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.

  • பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் மற்றும் நடத்துநர் உரிமம் போன்றவை வழங்குதல்.
  • இயங்கு ஊர்திகளின், பதிவு மற்றும் புதுப்பித்தல் சான்று வழங்குதல்.
  • தகுதிச் சான்று வழங்கல் மற்றும் தகுதிச் சான்று புதுப்பித்தல் போன்றவை.
  • தேசிய போக்குவரத்து ஊர்தி அனுமதி, போக்குவரத்து ஊர்தி அனுமதி , ஒப்பந்த ஊர்தி அனுமதி (சுற்றுலா ஊர்தி , வாடகை ஊர்தி, ஆட்டோ ரிக்ஷா , ஷேர் ஆட்டோ போன்றவை), கல்வி நிறுவன பேருந்துகள், தனியார் பணி வாகனங்கள், பேருந்து போன்றவைகளுக்கு அனுமதி வழங்குதல்.
  • சாலை பாதுகாப்பு மற்றும் இதர குற்றங்கள் தொடர்பாக அனைத்து வகை போக்குவரத்து வாகனங்களையும் ஆய்வு செய்தல் மற்றும் உரிய கட்டணங்களை வசூலித்தல்.
  • அபாயகரமாக விபத்து ஏற்படுத்திய வாகன ஓட்டுநர்கள் மற்றும் இதர வாகன ஓட்டுநர்களின் மீது நடவடிக்கை எடுத்தல்.
  • ஒவ்வொரு வருடமும், பொதுமக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்த, ஜனவரி மாதத்தில் சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடுதல்.
  • மாசு பரிசோதனை மையம், அவசர விபத்து சிகிச்சை மையம் ஆகியவற்றை ஆய்வு செய்தல் போன்றவை.
தொடர்பு எண். 04329-250112

நன்றி.