மூடுக

இந்து சமய அறநிலையத்துறை

 1. அரியலூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரிவில் உள்ள அரியலூர் மாவட்டத்தில் 88 பட்டியலைச் சார்ந்த திருக்கோயில்களும் (ஆண்டு வருமானம் ரூ.5000/- க்கு மேல் கடலூர் மண்டல இணை ஆணையர் ஆளுகையின் கீழ் உள்ள திருக்கோயில்கள்) 1349 பட்டியலைச் சாராத திருக்கோயில்களும் (ஆண்ட வருமானம் ரூ.5000/- கீழ் அரியலூர் உதவி ஆணையர் ஆளுகையின் கீழ் உள்ள திருக்கோயில்கள்) உள்ளது.
 2. அரியலூர் மாவட்டத்தில் 8 திருக்கோயில்களில் சுமார் 400 நபர்களுக்கு கீழ்கண்ட திருக்கோயில்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது.
  1. அருள்மிகு கலியுக வரதராஜபெருமாள் திருக்கோயில், கல்லங்குறிச்சி
  2. அருள்மிகு ஆலந்துறையார் கோதண்டராமசாமி திருக்கோயில், அரியலூர்
  3. அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோயில், திருமழப்பாடி
  4. அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், திருமானூர்
  5. அருள்மிகு பாலசுப்ரமணிசுவாமி திருக்கோயில், அரியலூர்
  6. அருள்மிகு கழுமலைநாதசுவாமி திருக்கோயில், உடையார்பாளையம், ஜெயங்கொண்டம்
  7. அருள்மிகு வீரநாராயணபெருமாள் திருக்கோயில், குருவாலப்பர்கோவில், உடையார்பாளையம்
  8. அருள்மிகு சிவதாண்டீஸ்வரர் திருக்கோயில், செந்துறை
 3. இந்து சமய அறநிலையத்துறை மூலம் திருக்கோயில்களில் திருப்பணி செய்யப்பட்டு குடமுழுக்குகள் நடத்தப்பட்டு வருகின்றன.
 4. இத்துறை மூலம் நிதி உதவிக்கு பரிந்துரைக்கப்படும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வாழும் பகுதியில் உள்ள கிராமப்புறத் திருக்கோயில்கள் மற்றும் ஆதிதிராவிடர் வாழும் பகுதியிலுள்ள திருக்கோயில்கள் ஆகியவற்றின் திருப்பணிகளுக்காக 2020 – 2021 முதல் வருடந்தோறும் ரூ.2,00,000/- திருப்பணி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
 5. ஒரு காலப் பூஜை

  ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் 189 திருக்கோயில்கள் உள்ளன.

 6. கிராமக் கோவில் பூசாரிகள் நலவாரியம்

  கிராம கோவில் பூசாரிகள் நலவாரிய திட்டத்தின் கீழ் 316 கிராம கோவில் பூசாரிகளுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

 7. கிராமப் பூசாரிகள் ஓய்வூதிய திட்டம்

  கிராம கோவில் பூசாரிகள் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 36 நபர்களுக்கு கிராம பூசாரிகள் ஓய்வூதியம் மாதம் ரூ.4,௦௦௦/- வீதம் வழங்கப்படுகிறது.

 8. இத்துறை மூலம் பரிந்துரைக்கப்படும் வருமானம் குறைவாக உள்ள திருக்கோயில்களுக்கு சட்டபேரவை விதி எண் 110 ன் கீழ் வருடந்தோறும் பூஜைப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
 9. தலைமை :

  உதவி ஆணையர்

  அலுவலக பணியாளர்கள் :

  தலைமை எழுத்தர், சுருக்கெழுத்து தட்டச்சர்கள், தட்டச்சர், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள்.

  களப்பணியாளர்கள் :
  1. செயல் அலுவலர், அருள்மிகு கோதண்டராமசாமி திருக்கோயில், அரியலூர்
  2. செயல் அலுவலர், அருள்மிகு கலியுக வரதராஜபெருமாள் திருக்கோயில், கல்லங்குறிச்சி
  3. செயல் அலுவலர், அருள்மிகு விஸ்வநாதசுவாமி திருக்கோயில், திருமழப்பாடி
  4. செயல் அலுவலர், அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், திருமானூர்
  5. செயல் அலுவலர், அருள்மிகு இராமநாராயண பெருமாள் திருக்கோயில், கோடாலிக்கருப்பூர்
  6. செயல் அலுவலர், அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில், விக்கிரமங்கலம்
  7. செயல் அலுவலர், அருள்மிகு கழுமலைநாதசுவாமி திருக்கோயில், ஜெயங்கொண்டம்
  8. செயல் அலுவலர், அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயில், கங்கைகொண்ட சோழபுரம்
  ஆய்வாளர்கள் :
  1. ஆய்வாளர், அரியலூர் பிரிவு
  2. ஆய்வாளர், செந்துறை பிரிவு
  3. ஆய்வாளர், திருமானூர் பிரிவு
  4. ஆய்வாளர், கீழப்பழுவூர் பிரிவு
  5. ஆய்வாளர், உடையார்பாளையம் பிரிவு
  6. ஆய்வாளர், ஜெயங்கொண்டம் பிரிவு
  7. ஆய்வாளர், ஆண்டிமடம் பிரிவு
  8. ஆய்வாளர் (வழக்கு) அரியலூர் உதவி ஆணையர் பிரிவு
  அலுவலக முகவரி :

  உதவி ஆணையர்
  இந்து சமய அறநிலையத்துறை
  228 – 2 வது தளம்
  மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
  அரியலூர் 621 704

  தொலைபேசி எண் : 04329 – 228649, 228015