மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
வெளியிடப்பட்ட தேதி : 23/01/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரியலூர் மாவட்டத்தில் ரூ.22.10 கோடி மதிப்பீட்டில் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டினார். கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற காணொளி காட்சி நிகழ்ச்சியில் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.(PDF 93KB)