அரியலூர் மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 194 நபர்களுக்கு பணியமர்வு ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
வெளியிடப்பட்ட தேதி : 16/12/2023
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் (மகளிர்திட்டம்) சார்பில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 194 நபர்களுக்கு பணியமர்வு ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று (16.12.2023) வழங்கினார்.