மூடுக

காணத்தக்க இடங்கள்

அரியலூர் மாவட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் கோவில்கள் பல உள்ளன.

மேலப்பழுவூர் & கீழையூர்

இந்த கிராமத்தின் பழைய பெயர் மன்னுபெரும்பழுவூர், பெரியபழுவூர்

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் - மேலப்பழுவூர்

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் – மேலப்பழுவூர்

மற்றும் மேலைப்பழுவூர் என இருந்தது. சோழ அரசர்களாகிய முதலாம் ஆதித்யன் முதல், முதலாம் இராஜேந்திர சோழன் வரையிலான இவர்களது காலங்களில் கேரளாவிலிருந்து வந்த பழுவேட்டரையர்கள், நிலக்கிழார்களாக இருந்து இக்கிராமத்தை தலைநகராகக் கொண்டு அரியலூர் பகுதியை ஆண்டு வந்தனர். குமரன் கந்தன், குமரன் மறவன், கந்தன் அமுதன், மறவன் கந்தன் போன்றோர் பழுவேட்டரையர்கள் குடும்பத்தில் மன்னர்களாக இருந்தனர். இவ்வூரிலுள்ள சுந்தரேஸ்வரர் கோவில், முதலாம் ஆதித்ய சோழன் காலத்திற்குப் பிற்பட்டதாகும். இதன் பெயர் பகைவிடை ஈஸ்வரம்.

இரட்டை கோயில்கள் - கீழையூர்

இரட்டை கோயில்கள் – கீழையூர்

இக்கிராமத்தின் கிழக்குப்பகுதியிலுள்ள கீழையூர், சோழர்களின் காலத்தில் ஆவணி கந்தர்வபுரம் என அழைக்கப்பட்டது. இது ஊர் ஊராய்ச் சென்று வணிகம் செய்பவர்களின் ஒரு வாணிக நகரமாக இருந்தது. ஆவணி கந்தர்வ ஈஸ்வரம் என அழைக்கப்பட்ட கீழையூரில் முதலாம் ஆதித்யா மன்னனின் 13 ஆவது வயதில் கி.பி 884 ஆம் ஆண்டு குமரன் கந்தன் பழுவேட்டரையரால் சிவன் கோவில் கட்டப்பட்டது. சோழர் கால கோவில்களில் ஒன்றான இந்த கோவில் மிகச் சிறந்த கல் கோவில்களில் ஒன்று. அழகான சிற்பங்களை வரிசையாகக் கொண்டு வெவ்வேறு கட்டிடக்கலை முறையில் இருப்பதால் சிறந்த முறையில் பாதுகாக்கப்படுகிறது. சோழ மன்னர்கள், பழுவேட்டரையர்கள் குடும்பத்துடன் திருமண உறவுகள் கொண்டிருந்தார்கள். பராந்தக சோழன், குமரன் மறவன் பழுவேட்டரையர் மகளான அருண்மொழிநங்கையை மணந்து, அரிஞ்சய சோழனை ஈன்றார். உத்தம சோழரும் (970-986) பழுவேட்டரையர்கள் குடும்பத்தைச் சேர்ந்த இளவரசியை மணந்தார். முதலாம் இராஜராஜனின் மனைவியாகிய, பஞ்சவன்மாதேவி, ஆவணி கந்தவபுரத்தைச் சேர்ந்தவர். சோழர்கள், இத்தலைநகரத்தில் நாணயத் தொழிற்சாலையை வைத்திருந்ததாகத் தெரிய வருகிறது.


கீழப்பழுவூர்

கீழப்பழுவூர், பழுவேட்டரையர்களின் தலைநகரத்தின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டது. குன்றக்குர்ரமில் உள்ள பிரம்மதேய கிராமமான இது, சிறுபழுவூர் என அழைக்கப்பட்டது. திருஞானசம்பந்தர், கி.பி 7 ஆம் நூற்றாண்டில் ஆலந்துறையார் கோவிலைப்பற்றி பாடல்கள் பாடியுள்ளார். பரசுராம முனிவர் தன் தாயைக் கொன்ற பாவத்தை, இங்கு தவமிருந்து நீக்கிக் கொண்டார் என சொல்லப்படுகிறது. துறவி சம்பந்தர் காலத்தில், இக்கோவில் மலையாள பிராமணர்களால் வழிபாடு செய்யப்பட்டது. இக்கோவில் முதலாம் பராந்தக சோழன், உத்தம சோழன் ஆகியோர் காலத்தில் கற்களால் கட்டப்பட்டது.


திருமழப்பாடி

வைத்தியநாத சுவாமி திருக்கோயில் - திருமழபாடி

வைத்தியநாத சுவாமி திருக்கோயில் – திருமழபாடி

இவ்விடத்தின் வரலாறு, சங்க காலத்திலிருந்து தொடங்குகிறது. இது சங்க கால மழவர் பரம்பரையினரின் இராணுவ முகாமாக இருந்ததால், மழவர்பாடி என்று அழைக்கப்பட்டு பின்னர் திருமழப்பாடி என்றானது.

இந்த இடத்தில் உள்ள வைத்தியநாத சுவாமி என்று அழைக்கப்படும் சிவன் கோவிலானது தேவார நாயன்மார்களான அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோர்களால் வழிபாடு செய்யப்பட்டு, பாடல் பெற்ற இடமானது.

இது அய்யடிகள் காடவர்கோன் அவர்களால் வணங்கப்பட்டு அவரது க்ஷேத்திர வெண்பாவில் குறிப்பிடப்பட்டு பாராட்டப்பட்டுள்ளது. இம்முனிவர், மகேந்திரவர்ம பல்லவனின்(598-630) பாட்டனார் சிம்மவர்ம பல்லவனால்(540-558) அடையாளம் காணப்பட்டார்.

இந்த இடத்தின் தெய்வம், சுந்தரரின் கனவில் தோன்றி, தன்னுடைய இடத்தைப் பார்வையிட்டுத் தன்னை துதிக்குமாறு கூறியதாக நம்பப்படுகிறது. அதன்படி சுந்தரர் இக்கோவிலுக்கு வந்து வழிபட்டு, புகழ்பெற்ற தேவாரப் பாடலாக ‘பொன்னார் மேனியனே’ என்று தொடங்கி பாடியுள்ளார்.

வைத்தியநாத சுவாமி திருக்கோயில் சிலைகள்- திருமழபாடி

வைத்தியநாத சுவாமி திருக்கோயில் சிலைகள்- திருமழபாடி

இச்சிவன் கோவில், முதலாம் ஆதித்ய சோழன் (871-907) காலத்தில் கற்களால் கட்டப்பட்டது. பின்னர் முதலாம் இராஜராஜ சோழனின் ஆணையின்படி, இக்கோவில் அவரது மகன் முதலாம் இராஜேந்திர சோழனால் புதுப்பிக்கப்பட்டு பணி முடிக்கப்பட்டது.

ஹொய்சள மன்னன் வீரநரசிம்மனால் கி.பி 1235-36 இல் மீண்டும் சீரமைக்கப்பட்டது. முதலாம் ஆதித்யா , முதலாம் இராஜராஜன் மற்றும் முதலாம் இராஜேந்திரன் ஆகிய மன்னர்களின் அரசிகளால் ஆபரணங்களும், நிலங்களும் இக்கோவிலுக்குப் பரிசாக வழங்கப்பட்டன.

முதல் மற்றும் இரண்டாவது கோபுரங்கள் முறையே பாண்டியர் மற்றும் சோழர் காலங்களில் கட்டப்பட்டன. இந்த கோவிலின் புகழ்பெற்ற திருவிழா, நந்தி (நந்தி கல்யாணம்) திருமணம் ஆகும். இத்திருமணவிழாவை காண்பதன் மூலம் திருமணத்தடைகள் நீங்குவதாக பரவலான நம்பிக்கை இப்பகுதியில் உள்ளது.

 


காமரசவல்லி

கார்கோடேஸ்வரர் - காமரசவல்லி

கார்கோடேஸ்வரர் – காமரசவல்லி

இவ்வூரில் உள்ள வாலாம்பாள் அம்மன் உடனுறை சுந்தரேஸ்வரர் கோவில், சுந்தர சோழன் காலத்தில் கி.பி.962 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இங்கு ரதி தவமிருந்து தன் கணவன் மன்மதனை மீட்டதால் இவ்வூர் காமரதிவல்லி என பெயர் பெற்றதாக உள்ளூர் மரபுவழிக் கதைகள் கூறுகின்றன. இவ்வூரின் கிழக்குப்பகுதியில் அழகியமணவாளம் என்னும் ஊர் உள்ளது. இது ரதியின் அழகிய கணவன் பெயரால் அழகியமணவாளம் (அழகிய கணவன் – மன்மதன்) என்று அழைக்கப்பட்டது. ரதியின் ஒரு அழகான வெண்கல உருவச்சிலை இக்கோயிலில் பாதுகாக்கப்படுகிறது.

நாக அரசன் கார்க்கோடகன், தனது சாபம் நீங்க, இங்குள்ள சிவனை வழிபட்டதால் இக்கோவில் கார்கோடக ஈஸ்வரம் என வழங்கப்பட்டதாக ஒரு கதை சொல்லப்படுகிறது. இக்கதையை விளக்கும் படங்களுடனான கல்வெட்டுப்பலகை ஒன்று இக்கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு 40 க்கும் மேற்பட்ட சோழ, பாண்டிய, ஹொய்சளர்களின் காலத்திய கல்வெட்டுகள் உள்ளன. இக்கோவிலுக்கு திருநல்லூர் ஸ்ரீகோவில் மகாதேவர், திருநல்லூர் பரமேஸ்வரர், திருகார்க்கோடக ஈஸ்வரத்து மகாதேவர் கோவில் எனவும் பெயர்கள் உள்ளதாக கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. இவ்வூருக்கு காமரசவல்லிசதுர்வேதிமங்கலம் என்ற பெயரும் உள்ளதாக கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இக்கோவிலில் சோழர் காலத்திய சிற்பங்களும், வெண்கலச்சிலைகளும் உள்ளன.


கோவிந்தப்புத்தூர்

கோவிந்தப்புத்தூர், உடையார்பாளையம் வட்டத்தில், கொள்ளிடம் ஆற்றின் வடக்குக் கரையில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள சிவன் கோவில் கங்க ஜகதீஸ்வரர் கோவில் என அழைக்கப்படுகிறது. மகேந்திரவர்ம பல்லவன் காலத்திய, அப்பர் மற்றும் சம்பந்தர் ஆகியோர் தங்களது தேவார திரட்டுகளில் இக்கோவிலைப் பற்றிப் புகழ்ந்து பாடியுள்ளனர். இங்கு பார்த்தன் (விஜயன் – மகாபாரத பாண்டுவின் மகன்) சிவனை வழிபட்டு, ஒரு வரம் பெற்றதாக இவர்களது பாடல்கள் மூலம் தெரிய வருகிறது. காமதேனு பசு, சிவலிங்கத்தின் மீது பாலைச் சொரிந்து வழிபட்டதால் ‘கோ-கறந்த-புத்தூர்’ என அழைக்கப்பட்டு பின்னர் கோவிந்தப்புத்தூர் என மருவியது. சோழ, பாண்டிய மற்றும் விஜய நகர மன்னர்களின் கல்வெட்டுக்கள் இக்கோவில் சுவர்களில் பொறிக்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள கோவில், உத்தம சோழன் காலத்தில் கி.பி 980 இல் அவரது ஆணையின்படி, குவலாலபுரம் ( கோலார், கர்நாடகா) ஊரைச் சேர்ந்த அம்பலவாண பழுவூர் நாயக்கரால் கட்டப்பட்டது. இக்கோவிலில் முற்காலச் சோழர் காலத்திய சிற்பங்களும், வெண்கலச்சிலைகளும் உள்ளன.

ஸ்ரீபராந்தகசதுர்வேதிமங்கலத்தில் உள்ள கல்வெட்டு இவ்விடத்தை, விஜயமங்கலம் என குறிப்பிடுகிறது. மூன்றாம் இராஜேந்திர சோழனின் சாதனைகள் பற்றிய குறிப்பு இக்கோவிலில் பொறிக்கபட்டுள்ளதை சம்பந்தர், தேவாரப் பாடல்களில் குறிப்பிட்டுள்ளார்.


விக்கிரமங்கலம்
புத்தர் சிலைகள் - விக்கிரமங்கலம்

புத்தர் சிலைகள் – விக்கிரமங்கலம்

 

முதலாம் இராஜேந்திர சோழன் ஆட்சிக் காலத்தில் இக்கிராமம் நிறுவப்பட்டு அவரது குடும்பப் பெயரால் விக்கிரமசோழபுரம் என அழைக்கப்பட்டது. இந்த இடம் சோழ மன்னர்களின் துணை நகரமாக விளங்கியதாக விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்க சோழன் மற்றும் மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆகியோரின் காலத்திய கல்வெட்டுக்கள் கூறுகிறது.

இவ்விடத்திலிருந்து சோழ நாட்டின் பல கோவில்களுக்கு நிலங்களை தானமாக வழங்க ஆணை பிறப்பித்தனர்.சோழர் காலத்தில் விக்கிரமசோழபுரம், ஒரு புகழ்பெற்ற வர்த்தக மற்றும் வாணிப மையமாக இருந்தது. சோழர் காலத்திய அழகிய ஜெயின் மற்றும் புத்தர் சிற்பங்கள் இந்த கிராமத்தில் பாதுகாக்கப்படுகிறது. இராஜேந்திர சோழீஸ்வரம் எனப்படும் இச்சிவன் கோவில் முதலாம் இராஜேந்திர சோழன் (1012-1044) காலத்திற்கு அழைத்துச் செல்கிறது.


செந்துறை, சென்னிவனம், ஸ்ரீபுரந்தான்

கல்வெட்டு ஆதாரங்களின்படி, செந்துறை, சென்னிவனம் மற்றும் ஸ்ரீபுரந்தானில் உள்ள சிவன் கோவில்கள், முறையே முதலாம் இராஜராஜன் (985-1014), முதலாம் இராஜேந்திரன் (1012-1044) மற்றும் மூன்றாம் குலோத்துங்கன் (1178-1218) ஆகியோரின் காலத்தில் கட்டப்பட்டவை.


கங்கைகொண்டசோழபுரம், கங்கைகொண்டசோழீச்சரர் கோவில்

கங்கைகொண்ட சோழபுரம்

கங்கைகொண்ட சோழபுரம்

முதலாம் இராஜராஜசோழன் ஆட்சியில் கட்டப்பட்ட கங்கைகொண்டசோழபுரத்திலுள்ள மிகப்பெரிய கங்கைகொண்டசோழீச்சரர் கோவில் , அரியலூர் பகுதியில் மிகச்சிறந்த ஒன்றாகும். கி.பி 1023 இல், கங்கை சமவெளியை வெற்றி கொண்ட பின்னர் முதலாம் இராஜேந்திர சோழனால், கங்கைகொண்டசோழபுரம் எனும் நகரமும் கங்கைகொண்டசோழீச்சரம் எனும் சிவன் கோவிலும் சோழ கங்கம் எனும் ஏரியும் வெற்றியின் நினைவாக அமைக்கப்பட்டது. இம்மூன்றும், கங்கை நதிகரையில் சோழர்களின் புலிக்கொடியை ஏற்றிய தமிழர்களுடைய வீரத்தின் நினைவுச்சின்னங்களாக இன்றும் விளங்குகின்றன. அவன் தனது தலைநகரத்தை தஞ்சாவூரிலிருந்து புதிதாகக் கட்டப்பட்ட இங்கு மாற்றினான். அவனது காலத்திலிருந்து, கி.பி 1279 இல் ஆட்சி செய்த சோழர் வம்சத்தின் இறுதி வரை, சோழ சாம்ராஜ்யத்தின் தலைநகராக 256 ஆண்டுகள் இருந்தது. அவர் இங்கு கட்டப்பட்ட பிரம்மாண்டமான கற்கோவில், இடைக்கால சோழர் காலத்திய அழகான சிற்பங்கள் நிறைந்த களஞ்சியமாகும். இந்த நகரம் ஒட்டக்கூத்தரின் மூவர் உலா, ஜெயங்கொண்டாரின் கலிங்கத்துப்பரணி ஆகிய இலக்கியங்களில் புகழ்ந்து பாடப்பட்டுள்ளது.

சிற்பங்கள் -கங்கைகொண்ட சோழபுரம்

சிற்பங்கள் -கங்கைகொண்ட சோழபுரம்

இராஜேந்திர சோழனின் கங்கை பயணம் அவனது ஆட்சியின் 11 வது ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது. சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஏசாலம் செப்புத்தகடுகள் மூலம் கி.பி 1036 இல் முதலாம் இராஜேந்திர சோழனால் கங்கைகொண்டசோழீச்சரம் கோவில் கட்டப்பட்டதாக உறுதியான ஆதாரங்கள் கிடைக்கப்பெறுகிறது. முதலாம் இராஜேந்திர சோழன் அவனது ஆட்சியின் 24 ஆம் ஆண்டில் இந்த கோவிலுக்கு கிராமங்களைத் தானமாகக் கொடுத்த விபரம், கி.பி 1068 இல் ஆட்சி செய்த வீரராஜேந்திர சோழனின் குறிப்புகளில் இருந்து கிடைக்கப்பெறுகிறது.

 

இன்றளவும் வாழும் வரலாறாக உள்ள இக்கற்கோவில், முதலாம் இராஜேந்திர சோழனின் காலம் முதல் சோழர்களின் கலை மற்றும் கட்டிடக்கலைகளின் அழகிய தொகுப்பாக உள்ளது. ஆந்திரா, கர்நாடகா மற்றும் வங்காளம் ஆகிய இடங்களிலிருந்து எடுத்து வந்த பல சிற்பங்கள்,போர் நினைவுப் பரிசாக இக்கோவிலிலும், அருகிலுள்ள கிராமங்களிலும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

 

சந்தேஷ்வர அனுக்கிரக மூர்த்தி மற்றும் சரஸ்வதி ஆகியவை இக்கோவிலுள்ள அழகிய சிற்பங்கள் ஆகும். தற்போது இக்கோவில் இந்திய தொல்லியல் துறை மற்றும் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. சமீபத்தில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய நினைவுச்சின்னங்களுள் ஒன்றாக இதனை அறிவித்துள்ளது.


அரியலூர்- கோதண்டராமசாமி கோவில்

கோதண்டராமசாமி கோவில் என்ற ஒரு விஷ்ணு கோவில் அரியலூரில் உள்ளது. இக்கோவிலின் மூலவர் ஸ்ரீனிவாசப்பெருமாளாக இருந்தாலும், இது ராமன், லக்ஷ்மணன் மற்றும் சீதை ஆகியோர் கோவில் கொண்டுள்ளதால் கோதண்டராமசாமி கோவில் என்றே அழைக்கப்படுகிறது.

கிழக்கு நோக்கியுள்ள இச்சன்னதியில், ஸ்ரீனிவாச பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகிய இரு மனைவியருடன் காட்சி தருகின்றார். இங்கு கர்ப்பகிரஹம் 15 சதுர அடியிலும்,அர்த்தமண்டபம் 17 அடி நீளத்திலும் மற்றும் மகா மண்டபமும் உள்ளன.

தெற்கு நோக்கியுள்ள, பிற்காலத்தில் சுண்ணாம்புக்கல்லால் கட்டப்பட்ட கோதண்டராமசாமி கோவிலின் சன்னதி, அர்த்தமண்டபத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. விக்கிரமங்கலம் அருகேயுள்ள கொள்ளிடம் ஆற்றின் கரையிலிருந்து கொண்டு வரப்பட்ட ராமன், லக்ஷ்மணன் மற்றும் சீதை ஆகியோரது கற்சிலைகள் சன்னதியினுள் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விக்கிரமங்ககலம் அருகே கொள்ளிடம் ஆற்றின் கரையிலிருந்து அரியலூர் அரசரால் ராமன், லக்ஷ்மணன் மற்றும் சீதையின் கற்சிலைகள் கொண்டு வரப்பட்டு பித்தளை மற்றும் வெண்கலக்கவசங்கள் அணிவிக்கப்பட்டு இச்சன்னதியில் நிறுவப்பட்டுள்ளது. தசாவதார மண்டபம் எனப்படும் 20 அடி உயரமுள்ள 10 தூண்கள் உள்ள நான்கு வரிசை கொண்ட பரந்த மண்டபம் கோயிலின் முன்பகுதியில் உள்ளது. 6.6 அடி உயரமுள்ள விஷ்ணுவின் 10 அவதாரங்கள் இத்தூண்களில் செதுக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் முதல் வரிசையில் அரசர் மற்றும் அரசியின் உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. கோவில் வளாகம் முழுவதும் சுற்றுச்சுவர்களால் சூழப்பட்டுள்ளது. 90 அடி உயரமும் 6 அடுக்குகளும் உள்ள கோபுரம் முன்பகுதியில் கட்டப்பட்டுள்ளது. கோபுரத்தின் அடித்தளம் சுண்ணாம்பு கற்களாலும், மேற்பகுதி செங்கல் மற்றும் சுண்ணாம்புக்கலவையாலும் கட்டப்பட்டுள்ளது. கோபுரத்தின் முன்பகுதியில் கருடன் சன்னதியும், தென்பகுதியில் கோதண்ட புஷ்கரணி எனும் குளமும் உள்ளது.

இரண்டு கல்வெட்டுக்களும் ஒரு செப்புத்தகடும் கோயிலில் உள்ளது. கோயிலின் தென்பகுதியில் கி.பி. 1635 இல் பொறிக்கப்பட்ட குறிப்பு உள்ளது.இந்த சிதலமடைந்த கல்வெட்டுகள், அரியலூர் அரசு நிலையிட்ட ஒப்பில்லாத மழவராயர் சில வரிகளை வசூலிக்க மறுத்ததை குறிப்பிடுகிறது. கி.பி. 1729 இல் அரசு நிலையிட்ட ரங்கப்ப மழவராயர் ஆட்சியில் வெளியிடப்பட்ட செப்புத்தகடு, ஆயர் குலத்தோர் (ஆயர்பாடி கோபால வம்சத்தார்) குடும்பங்களின் ஒவ்வொரு திருமண விழாவின்போதும் தலைக்கு ஒரு பணம் கோவிலுக்குச் செலுத்துமாறு ஆணையிட்டதைக் குறிப்பிடுகிறது.

கி.பி 1742 ஆண்டின், விஜய ஒப்பில்லாத மழவராயர் பேரனும் ரங்கப்ப மழவராயர் மகனுமாகிய விஜய ஒப்பில்லாத மழவராயர் காலத்திய கல்வெட்டு பிராமண வெங்கடபதி ஐயரைப் பற்றி குறிப்பிடுகிறது. இவ்விரண்டு கல்வெட்டுக்களும் கோவிலில் தற்போது காணப்படவில்லை.

இந்த கோவில் அரசு நிலையிட்ட ஒப்பில்லாத மழவராயர் காலத்தின் போது நடைமுறைக்கு வந்தது என்று மேலே குறிப்பிட்ட பதிவுகள் காட்டுகின்றன. தசாவதார மண்டபத்திலுள்ள சிலைகள் இவரது மற்றும் அரசியின் சிலைகளாக இருக்கலாம். இக்கோவிலின் கருவறையிலுள்ள அழகிய வேலைப்பாடு மிகுந்த அதிஷ்டானம், கும்பபஞ்சரம், தசாவதார சிற்பங்கள் மற்றும் கோபுரம் ஆகியவை, அரியலூர் அரசரின் கட்டிடக்கலை சாதனையின் அழகிய மையமாகத் திகழ்கிறது.


வேட்டக்குடி- கரையவெட்டி பறவைகள் சரணாலயம்

கரையவெட்டி

கரையவெட்டி

வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972 பிரிவு 18(1) இன் படியும் அரசு ஆணை எண். 219,சுற்றுச்சூழல் மற்றும் வனத்(FR.VI) துறை, நாள் 10.06.1997 இன் படியும் கரையவெட்டி பறவைகள் சரணாலயம் 453.71 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்க அறிவிக்கப்பட்டது . இச்சரணாலயம் அடிப்படையில் ஒரு பாசன ஏரியாகும். இந்த ஏரி, செப்டம்பர் மாதம் முதல் மேட்டூர் நீர்த்தேக்கத்திலிருந்து நீர் பெறுகின்றது. மேலும் அக்டோபர் முதல் ஜனவரி வரை வடகிழக்கு பருவக்காற்று மூலமும் கூடுதலாக நீரைப் பெறுகிறது.

இச்சரணாலயம், புலம்பெயரும் நீர்ப்பறவைகளுக்கான, தமிழ்நாட்டிலுள்ள

பறவைகள் - கரையவெட்டி

பறவைகள் – கரையவெட்டி

மிக முக்கியமான நன்னீர் ஏரிகளுள் ஒன்றாக விளங்குகிறது. மாநிலத்தின் பெரிய ஏரிகளுள் இதுவும் ஒன்று. இந்த ஏரி, மாநிலத்தின் மிக அதிக அளவிலான நீர்ப்பறவைகள் வந்து கூடும் இடமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இச்சரணாலயத்தில் உள்ள 188 பறவை இனங்களில் 82 இனங்கள் நீர்ப்பறவைகளாகும். அருகிவரும் பட்டைதலை வாத்து, இந்த ஏரியின் முக்கிய வருகையாளர்களுள் ஒன்றாகும். இச்சரணாலயத்தைப் பார்வையிட ஏற்ற காலம் செப்டம்பர் – மார்ச்.

[ படங்கள் (1.85 MB)]


ஏலாக்குறிச்சி

அடைக்கல மாதா ஏலாக்குறிச்சி,அரியலூர் மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற

ஏலாக்குறிச்சி கோவில்

ஏலாக்குறிச்சி கோவில்

இடங்களில் ஒன்றாகும். இது ரோமன் கத்தோலிக்கர்களுக்கான ஒரு புனித வழிபாட்டு தலமாகும். இத்தாலியிலிருந்து அரியலூர் பகுதிக்கு வந்த வீரமாமுனிவர் என அழைக்கப்படும் கான்ஸ்டாண்டினோபிள் ஜோசப் பெஸ்கி கி.பி 1710 முதல் 1742 ஆண்டு வரையிலான காலங்களில் கிருத்துவ மதத்தைப் பரப்பினார். இங்குள்ள அடைக்கல மாதா ஆலயம் இவரால் கட்டப்பட்டது. இவர், பாளையக்காரர் ஒருவரின் கொடிய நோயினை, அன்னை மாதா ஆசிர்வாதத்துடன் குணப்படுத்தினார். வீரமா முனிவரின் சேவையைக் கண்டு மகிழ்ந்த பாளையக்காரர், 60 ஏக்கர் நிலங்களை இக்கோவிலுக்கு வழங்கினார். இக்கொடை பற்றிய குறிப்புகள் கி.பி 1763 இல் கல்வெட்டில் பொறிக்கப்பட்டு, இந்த ஆலயத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.