தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 128 நபர்களுக்கு பணியமர்வு ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
வெளியிடப்பட்ட தேதி : 07/10/2024
அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்து, 04 மாற்றுத்திறனாளிகள் உட்பட 128 நபர்களுக்கு பணி நியமன ஆணையினை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டனர்(PDF 199KB)