அரசு கம்பிவடத் தொலைக்காட்சி
தமிநாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் விதி 1956-ன் படி 04.10.2007 அன்று அதிக தரம் குறைந்த விலையில் தமிழ்நாடு முழுவதும் 4 கட்டுப்பாட்டு அறைகளை அமைத்து சுமார் 8 கோடி செலவில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தஞ்சாவூர், கோயம்புத்தூர், வேலூர், மதுரை 4 கட்டுப்பாட்டு அறைகள் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
அரியலூர் மாவட்டத்தில் டிஜிட்டல் ஒளிபரப்பு தொடங்கப்பட்டது முதல் 25,780 செட்டாப் பாக்ஸ்கள் விநியோகம் செய்யப்பட்டு மக்களுக்கு குறைந்த கட்டணம் தரமான சிக்னல் என்ற முறையில் உயர் தொழில்நுட்பம் முறையில் செயல்பட்டு வருகிறது.
அரியலூர் மாவட்டத்தில் இரண்டு மறு ஒளிபரப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு அரியலூரில் உள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து அரியலூர் வட்டம் மற்றும் செந்துறை வட்டத்திற்கும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ஜெயங்கொண்டம் கட்டுப்பாட்டு அறையிலிருந்து உடையார்பாளையம் ஆண்டிமடம் ஆகிய வட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் ஒளிபரப்புசெய்யப்படுகிறது.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி அரியலூர் மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகம் மட்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தின் கீழ் பொது இ-சேவை மையம் இயங்குகிறது. மேலும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்திலும் தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தின் கீழ் ஆதார் சேர்க்கை மையங்கள் இயங்கி வருகின்றது.
இ-சேவை மையத்தில் கீழ்காணும் சேவைகள் சிறப்பாக வழங்கப்படுகிறது.
31 வகையான சான்றுகள் பதியப்படுகின்றன.
| 1.சாதிச்சான்று |
| 2.இருப்பிடச்சான்று |
| 3.வருமானச்சான்றிதழ் |
| 4.முதல்பட்டதாரிசான்றிதழ் |
| 5.கணவனால்கைவிடப்பட்ட சான்றிதழ் |
| 6.விவசாயவருமானச் சான்றிதழ் |
| 7.குடிபெயர்ச்சிசான்றிதழ் |
| 8.வேலையில்லாசான்றிதழ் |
| 9.விதவைசான்றிதழ் |
| 10. இயற்கைபேரிடர்காரணமாககல்விபதிவுகளைஇழந்ததற்கானசான்றிதழ் |
| 11. கலப்புதிருமணச் சான்றிதழ் |
| 12. வாரிசுசான்றிதழ் |
| 13. இதரபிற்படுத்தப்பட்ட வகுப்புச்சான்றிதழ் |
| 14. இருப்பிடச்சான்று |
| 15. சிறுகுறு விவசாய சான்றிதழ் |
| 16. சொத்துமதிப்புசான்றிதழ் |
| 17. ஆண்வாரிசுஇல்லா சான்றிதழ் |
| 18. திருமணமாகவில்லைசான்றிதழ் |
| 19. அடகுகடை உரிமம் பெறுவதற்கான சான்றிதழ் |
| 20. வட்டிகடை உரிமம் பெறுவதற்கான சான்றிதழ் |
| 21. பொதுகட்டிட உரிமம் வழங்குவதற்கான சான்றிதழ் |
| 22. இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம் (IGNOPS) |
| 23. ஆதரவற்றவிதவைஓய்வூதியத் திட்டம் (DWPS) |
| 24. ஆதரவற்றகைவிடப்பட்ட பெண் ஓய்வூதியத் திட்டம் (DDWPS) |
| 25. திருமணமாகாதபெண்கள் ஓய்வூதியத் திட்டம் (UWPS) |
| 26. முதல்வர்உழவர்பாதுகாப்புத் திட்டம் (CMUPT) |
| 27. ஆதரவற்றவிதவைசான்றிதழ் |
ஆதார் மையத்தில் கீழ்காணும் சேவைகள் சிறப்பாக வழங்கப்படுகிறது.
- ஆதார் புதிய பதிவு.
- கைரேகை புதுபித்தல்.
- முகவரி, தொலைப்பேசி எண், மின்னஞ்சல் மாற்றம்.
- பிறந்த தேதி திருத்தம் மற்றும் மாற்றம்.
- கைரேகை மற்றும் கண் கருவிழி மற்றும் புகைப்படம் புதுபித்தல்.