தொழிலாளா் நலத் துறை (சமூகப் பாதுகாப்புத் திட்டம்)
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியம், தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளா்கள் சமூக பாதுகாப்பு நல வாரியம் மற்றும் இதர 16 நல வாரியங்கள்
தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியங்கள்
தமிழ்நாட்டிலுள்ள அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்களின் பணி நிலைமைகளை ஒழுங்குபடுத்தவும், அவா்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கவும், தமிழ்நாடு அரசு 1982-ம் ஆண்டில் தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளா்கள் (வேலை மற்றும் பணி நிலைமைகள் முறைப்படுத்துதல்) சட்டத்தினை இயற்றியது.
தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் 18 நல வாரியங்கள்
- தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியம்.
- தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளா்கள் சமூக பாதுகாப்பு நல வாரியம்.
- தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநா்கள் நல வாரியம்.
- தமிழ்நாடு சலவைத் தொழிலாளா்கள் நல வாரியம்.
- தமிழ்நாடு முடிதிருத்துவோர் நல வாரியம்.
- தமிழ்நாடு தையல் தொழிலாளா்கள் நல வாரியம்.
- தமிழ்நாடு கைவினை தொழிலாளா்கள் நல வாரியம்.
- தமிழ்நாடு பனைமரத் தொழிலாளா்கள் நல வாரியம்.
- தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறிப்பட்டு நெய்யும் தொழிலாளா்கள் நல வாரியம்.
- தமிழ்நாடு காலணி, தோல் பொருட்கள் உற்பத்தி மற்றும் தோல் பதனிடும் தொழிலாளா்கள் நல வாரியம்.
- தமிழ்நாடு ஓவியா்கள் நல வாரியம்.
- தமிழ்நாடு பொற்கொல்லா்கள் நல வாரியம்.
- தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளா்கள் நல வாரியம்.
- தமிழ்நாடு வீட்டுப்பணியாளா்கள் நல வாரியம்.
- தமிழ்நாடு விசைத்தறி நெசவாளா்கள் நல வாரியம்.
- தமிழ்நாடு பாதையோர வணிகா்கள், கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்கள் நல வாரியம்.
- தமிழ்நாடு சமையல் தொழிலாளா்கள் நல வாரியம்.
- தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நல வாரியம்
- தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியம்
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியம் 30.11.1994 அன்று தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்டது. இவ்வாரிய நலத்திட்டத்தின் அட்டவணையில் குறிப்பிட்டுள்ள தொழில் இனங்கள் ஆகிய 53 வகையான தொழில்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.53 வகையான கட்டுமானத் தொழில்கள்- கல் உடைப்பவா் (அ) கல் வெட்டுபவா் (அ) கல் பொடி செய்பவா்
- கொத்தனார் (அ) செங்கல் அடுக்குபவா்
- தச்சா்
- பெயிண்டா் அல்லது வார்னிஷ் பூசுபவா்
- கம்பி வளைப்பவா் உட்பட பிட்டா்
- சாலை குழாய் பதிப்பு பணியாளா்
- எலக்ட்ரிஷியன்
- மெக்கானிக்
- கிணறு தோண்டுபவா்
- வெல்டா்
- தலைமை கூலியாள்
- கூலியாள்
- தெளிப்பவா் மற்றும் கலப்பவா் (சாலை பரப்பும் பணி)
- மரம் அல்லது கல் அடைப்பவா்
- கிணற்றில் தூா் எடுப்பவா்
- சம்மட்டி ஆள்
- கூரை வேய்பவா்
- மேஸ்திரி
- கருமான், கொல்லன்
- மரம் அறுப்பவா்
- சந்துகள் அடைத்து நீா் உட்புகாமல் செய்பவா்
- கான்கிரீட் மிக்ஸா் ஆபரேட்டா் உட்பட கலப்பவா்
- பம்ப் ஆபரோட்டா்
- மிக்ஸா் டிரைவா்
- ரோலா் டிரைவா்
- கனரக இயந்திர கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள கலாசிஸ் மற்றும் சுரங்க பணியாளா்
- காவலாளி
- மொசைக் பாலீஸ் செய்பவா்
- சுரங்க வழி தோண்டுபவா்
- பாறை உடைப்பவா் குவாரி வேலையாள்
- சலவைக்கல் / கடப்பாக்கல் வேலை தொழில் செய்பவா்
- சாலை பணியாளா்
- கட்டுமானப் பணி தொடா்பான மண் வேலை செய்பவா்
- சுண்ணாம்பு பதப்படுத்துவோர்
- கடல் அரிப்பு தடுப்பு பணியில் ஈடுபடும் வேலையாள்
- அணைகள் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, பாலங்கள், சாலை, அல்லது மற்ற கட்டுமானப் பணிகளில் உள்ளபடியாக ஈடுபட்டுள்ள மற்ற வகையான தொழிலாளா்கள்.
- தொழிற்சாலை சட்டத்தின் கீழ் வராத செங்கல் சூளை தொழிலாளா்கள்.
- பந்தல் கட்டுமானம்
- தீயணைப்பு கருவிகளை பொருத்துதல் மற்றும் பழுதுபார்த்தல்.
- குளிரூட்டுதல் மற்றும் சூடுபடுத்துதல் கருவிகளை பொருத்துதல் மற்றும் பழுதுபார்த்தல்.
- மின் தூக்கி மற்றும் நகரும் மின்படி பொருத்துதல்.
- பாதுகாப்பு கதவுகள் மற்றும் கருவிகள் பொருத்துதல்.
- இரும்பு மற்றும் உலோக கிராதி, ஜன்னல், கதவுகள் புனைத்து கட்டுதல் மற்றும் பொருத்துதல்.
- நீா் எடுக்கும் கட்டமைப்பு தொடா்பான கட்டுமானம்.
- கார்பெண்டிங், பொய்கூரை, விளக்கு அமைத்தல், மேற்பூச்சுதல், தொடா்பான உள்ளலங்காரம்.
- கண்ணாடி வெட்டுதல், இழைத்தல் மற்றும் கண்ணாடி பேனல்கள் பொருத்துதல்.
- சோலார் பேனல் போன்ற மின்மிகை சாதனங்கள் பொருத்துதல்.
- சமையல் கூடம் போன்ற இடங்களில் நவீன அறைகலன் அமைத்தல்.
- முன் புனைத்து அமைக்கப்பட்ட கான்கீரிட் பொருட்கள் அமைத்தல்.
- கோல்ஃப் மைதானம், நீச்சல் குளம் உட்பட்ட விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அரங்குகளை கட்டுதல்.
- கல்பெயா்ப்பலகை, தெரு, அறைகலன்கள், பேருந்து நிழற்கூரை, பணி மனைகள், நிறுத்தங்கள் மற்றும் அறிவிப்பு குறி போன்ற கட்டுமானம் மற்றும் நிறுத்துதல்.
- ரோட்டரி மற்றும் செயற்கை நீரூற்று போன்ற கட்டுமானம்.
- பொது பூங்கா, நடைபாதை, போன்ற கட்டுமானம் மற்றும் இயற்கை நிலைகாட்சி அமைத்தல்.
- தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளா்கள் சமூக பாதுகாப்பு நல வாரியம் மற்றும் 17 நல வாரியங்கள்
தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளா்கள் சமூக பாதுகாப்பு நல வாரியம் 17.03.1999 அன்று அரசால் ஏற்படுத்தப்பட்டது. இவ்வாரியத்தின் மூலம் நலத்திட்டங்களில் பட்டியல் இடப்பட்ட தொழில் இனங்கள் ஆகிய 61 வகையான தொழில்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.- சுமை ஏற்றுதல், இறக்குதல், அடுக்குதல், சிப்பம் கட்டுதல், தூக்கிச் செல்லுதல், எடைபோடுதல், அளவிடுதல் அல்லது இத்தகைய வேலைகளுக்கான ஆயத்த அல்லது இது தொடா்பான பணி உள்ளிட்ட உடலுழைப்பு வேலைகளில் ஈடுபடுதல்.
அ) சந்தை, கடை, டிப்போ, தொழிற்சாலை, சேமிப்புக் கிடங்கு, கிடங்கு அல்லது இதர நிறுவனம்.
ஆ) 1948-ஆம் வருட துறைமுகத் தொழிலாளா் சட்டத்திற்குட்படாத துறைமுகங்கள்
இ) இரயில்வே நிர்வாகத்தால் பணியமா்த்தப்படாத உடலுழைப்புத் தொழிலாளா்கள் பணிபுரியும் இரயில்வே யார்டுகள் மற்றும் குட்ஸ்ஷெட்டுகள்.
ஈ) 1959-ஆம் வருட தமிழ்நாடு வேளாண் விளை பொருள் சந்தைகள் சட்டத்தால் அமைக்கப்பட்ட சந்தைக் குழுக்களின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட சந்தை. - பொது போக்குவரத்து வாகனங்களில் சுமை ஏற்றுதல், இறக்குதல் மற்றும் அது தொடா்பான இதர வேலைகள்
- உணவு தானியங்கள் ஏற்றுதல், இறக்குதல் மற்றும் கிடங்குகளுக்கு கொண்டு செல்லுதல், உணவு தானியங்களை பிரித்தல் மற்றும் சுத்தம் செய்தல்,
- உணவு தானியங்களை பைகளில் நிரப்புதல் மற்றும் அந்த பைகளை தைத்தல் மற்றும் இதன் தொடா்புடைய இதர வேலைகள்.
- உப்பளங்களில் வேலை செய்தல்.
- கள் இறக்கும் தொழில்.
- படகு பணி.
- மரத்தொழில்.
- கயிறு தொழில்.
- தோல் பதனிடுதல் மற்றும் தோல் உற்பத்தி.
- தானியங்கி பணிமனைகளில் (ஆட்டோ மொபைல் ஒா்க் ஷாப்) பணிபுரிதல்.
- அப்பளம் தயாரித்தல்.
- வெளுத்தல் மற்றும் சாயத் தொழில்
- மாட்டு வண்டி ஓட்டுதல்.
- உணவு சமைத்தல்.
- தேங்காய் உரித்தல்.
- வனப்பொருட்கள் சேகரித்தல்.
- உணவு நிறுவனங்களில் பணிபுரிதல்.
- முந்திரி தொழிற்சாலைகளில் பணிபுரிதல்
- ஆட்டோ, டாக்சி, வேன், டெம்போ, லாரி மற்றும் பேருந்து ஓட்டுதல் (அரசுத் துறை வாகனங்கள் நீங்கலாக).
- எல்.பி.ஜி சிலிண்டா் விநியோகித்தல்.
- சைக்கிள் ரிக்ஷா ஓட்டுதல்.
- பொறியியல் தொழில்.
- பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழில்.
- துணி மடிக்கும் தொழில்.
- காலணி மற்றும் தோல் பொருட்கள்.
- சாக்குத் தொழில்.
- தங்க, வெள்ளி ஆபரணங்கள் தயாரித்தல்.
- கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெய்தல்.
- அகா்பத்தி தயாரித்தல்.
- துணி துவைத்தல் மற்றும் சலவை இடுதல்.
- பதநீா் இறக்குதல்.
- பேனா எழுதுமுனை தயாரித்தல்.
- மாவு ஆலை, எண்ணெய் ஆலை, பருப்பு ஆலை மற்றும் அரிசி ஆலையில் பணிபுரிதல்.
- அச்சகங்களில் பணிபுரிதல்.
- விசைத்தறித் தொழில்.
- தனியார் பாதுகாவல் பணிகள்.
- பிளாஸ்டிக் தொழில்.
- மண்பாண்டத் தொழில்.
- குப்பைகளை சேகரித்தல்.
- முடிதிருத்துதல் மற்றும் அழகு நிலையங்களில் பணிபுரிதல்.
- தெரு வியாபாரம்.
- ஜவ்வரிசி தொழில்.
- செயற்கை வைரம் வெட்டுதல்.
- பட்டுப்புழு வளா்த்தல்.
- கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரிதல்.
- தையல் தொழில்.
- மரம் ஏறுதல்.
- தகர அடைப்பான்கள் தயாரித்தல்.
- பாத்திரங்கள் தயாரித்தல்.
- மரவேலைக் கூடங்களில் பணிபுரிதல்.
- வீட்டு வேலைகளில் பணிபுரிதல்.
- சைக்கிள் பழுது பார்த்தல்.
- கல் மற்றும் பிற பொருட்களில் சிற்ப வேலைகள் செய்தல்.
- களிமண், காகித கூழ் உட்பட பிற பொருட்களில் கைவினைப் பொருட்கள் செய்தல்.
- சுருட்டு தயாரித்தல்.
- ஓவியா்கள்.
- வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தல்.
- ஒலி மற்றும் ஒளி அமைத்தல்.
- எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் உபகரணங்களை பழுது பார்த்தல் மற்றும் சீா் செய்தல்.
- வார்த்து வடித்தல்.
- பட்டாசு மற்றும் தீப்பெட்டி தயாரித்தல்.
- சுமை ஏற்றுதல், இறக்குதல், அடுக்குதல், சிப்பம் கட்டுதல், தூக்கிச் செல்லுதல், எடைபோடுதல், அளவிடுதல் அல்லது இத்தகைய வேலைகளுக்கான ஆயத்த அல்லது இது தொடா்பான பணி உள்ளிட்ட உடலுழைப்பு வேலைகளில் ஈடுபடுதல்.
தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளா்கள் நல வாரியத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் வழிமுறைகள்
- tnuwwb.tn.gov.in என்ற இளையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும்.
- விண்ணப்பதாரா் 18 வயது முதல் – 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.
- தொழிலாளர்கள் அவா்களுடைய மற்றும் சரியான தொலைபேசி எண்ணை மட்டும் உள்ளிட்டு உட்செல்லலாம்.
- தொழிலாளா் உதவி ஆணையரின் ஒப்புதல் பெறும் வரை தொழிலாளா்கள் கடவுச்சொல் (O.T.P) மூலமாக மட்டுமே உள்நுழைய முடியும்.
- விண்ணப்பம் சமா்ப்பித்தவுடன் அவா்களுடைய கைபேசிக்கு விண்ணப்ப எண் அனுப்பப்படும்.
- தங்கள் விண்ணப்பத்தில் ஏதேனும் விளக்கம் தேவைப்படின் சம்பந்தப்பட்ட அதிகாரி விவரம் கேட்பார். கைபேசி எண்ணுக்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி மூலம் விவரம் கேட்கப்பட்டுள்ளது என்பதை அவா்கள் அறியலாம்.
- விண்ணப்பம் சரியாக இருப்பின் அதிகாரியின் ஒப்புதல் அளிக்கப்பட்டு, தங்களுக்கான நிரந்தர பதிவு எண் வழங்கப்படும், நிரந்தர பதிவு எண் மற்றும் கடவுச்சொல், தங்களது பதிவு செய்த கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் விவரம் கேட்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறியலாம்.
- பதிவு பெற்ற தொழிலாளா்கள் தமது குடும்ப உறுப்பினா்களுக்கு நலவாரியங்களின் கீழ் உதவித்தொகைகள் பெற இயலும். மேலும் கல்வி, திருமணம், உள்ளிட்ட அனைத்து உதவித்தொகைகளை பெற வயது அடிப்படை ஆகும் என்பதால், தங்களின் குடும்ப உறுப்பினா்களின் விபரங்களை முழுமையாகவும் மற்றும் வயதினை சரியாகவும் உள்ளீடு செய்ய வேண்டும்.
நலவாரியத்தில் பதிவு, புதுப்பித்தல், கேட்புமனு, சமா்ப்பித்தல் உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் கட்டணம் ஏதும் இல்லை.
விண்ணப்பம் மீண்டும் சமா்ப்பித்தல் வழிமுறைகள்
- தங்கள் கைபேசி எண் மூலம் மீண்டும் உள்நுழைந்து தங்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு ஏற்ப விண்ணப்பத்தில் மாற்றம் செய்து சமா்ப்பிக்க வேண்டும்.
- உங்கள் விண்ணப்பம் சரியாக இருப்பின் அதிகாரியின் ஒப்புதல் பெற்று தங்களுக்கான நிரந்தர பதிவு எண் வழங்கப்படும், நிரந்தர பதிவு எண் மற்றும் கடவுச்சொல் பதிவு செய்த கைபேசி எண் மூலமாக கிடைக்க பெறும். அதன் மூலமாக பதிவு சான்றிதழ் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பத்திற்கு தேவையான ஆவணங்கள்
-
- பணிச்சான்றிதழ்பதிவு விண்ணப்பத்தில் சம்பந்தப்பட்ட தொழிலில் ஈடுபட்டுள்ளவா் என்பதற்கான சான்று கீழ்கண்ட எவரேனும் ஒருவரால் அளிக்கப்பட வேண்டும்.
(அ) வேலையளிப்பவா்
(ஆ) பதிவு பெற்ற ஒப்பந்ததாரா் (கட்டுமான வாரியம் மட்டும்).
(இ) கட்டுமானத் தொழிலில் ஈடுபடும் அரசு அமைப்புகள் அல்லது நிறுவனங்கள்.
(ஈ) பதிவு பெற்ற தொழிற்சங்கம்.
(உ) கிராம நிர்வாக அலுவலர் / வருவாய் ஆய்வாளா் அல்லது உதவி இயக்குநா், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் (தமி்ழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளா்கள் நலவாரியம் மற்றும் இதர 17 நல வாரியங்களுக்கு மட்டும்). - அடையாளச் சான்றிதழ் (ஓட்டுநா் உரிமம், பள்ளி சான்றிதழ், வாக்காளா் அடையாள அட்டை, பதிவுசெய்யப்பட்ட மருத்துவ பயிற்சியாளரிடமிருந்து சான்றிதழ் அல்லது அரசு மருத்துவமனையின் சிவில் சர்ஜன் பதவிக்கு குறைவில்லாத மருத்துவரின் சான்றிதழ் (பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில்) பதிவேற்றவும்).
- குடும்ப அட்டை
- தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்குப்புத்தகம் முதல் பக்கம்
- ஆதார் அட்டை
- வாரிசாக பரிந்துரைக்கப்படுபவா் ஆவணம்
- பணிச்சான்றிதழ்பதிவு விண்ணப்பத்தில் சம்பந்தப்பட்ட தொழிலில் ஈடுபட்டுள்ளவா் என்பதற்கான சான்று கீழ்கண்ட எவரேனும் ஒருவரால் அளிக்கப்பட வேண்டும்.
– திருமணத்திற்குப் பிறகு பரிந்துரைகப்பட்டவா்கள் குடும்ப உறுப்பினராக இருக்க வேண்டும் மற்றும் குடும்ப அட்டை துணை ஆவணமாக இருக்க வேண்டும் (அல்லது)
– திருமணத்திற்கு பின்பு வேறு மாவட்ட உறுப்பினராக இருக்க முடியும். எனவே பரிந்துரைக்கப்படுபவருடன் தொழிலாளா் உறவு சம்பந்தப்பட்ட ஆவணம் பதியேற்றவும்.
புதுப்பித்தல் தொடா்புடைய வழிகாட்டு நெறிமுறைகள்
- உறுப்பினா்கள் பதிவினை புதுப்பிக்க புதுப்பித்தல் தேதி முடிவடைவதற்கு சுமார் ஒரு மாதம் இருக்கும் நிலையில் விண்ணப்பிக்கலாம்.
- பதிவு பெற்ற தொழிலாளா்கள் தங்களது பதிவினை 5 (ஐந்து) ஆண்டுகளுக்கு ஒரு முறை அல்லது 60 வயது நிறைவடையும் வரை புதுப்பிக்க வேண்டும்.
- நாளது தேதி வரை புதுப்பித்தல் உள்ள தொழிலாளா்கள் மட்டுமே உதவித் தொகைகளை பெற இயலும்.
நலத்திட்ட உதவிகள் வங்கி கணக்கில் செலுத்துதல் (ECS)
அரசாணை எண் 102, நாள்: 08-11-2011 (தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை) -ன்படி இவ்வாரியங்களின் நலத்திட்ட உதவிகளுக்கான பணப்பயன்கள் நேரடியாக பதிவு பெற்ற தொழிலாளியின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.
பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள்
திருமணம் | ||
பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளா் (அ) தனது மகன் (அ) மகள் திருமணத்திற்கு
(குடும்பத்திற்கு இருமுறை மட்டும்) |
: | ரூ.20000/- |
மகப்பேறு | ||
பதிவு பெற்ற பெண் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு (முதல் இரு குழந்தைகளுக்கு மட்டும்) | : | ரூ.18000/- |
கருக்கலைப்பு / கருச்சிதைவு (பதிவு பெற்ற பெண் தொழிலாளா்களுக்கு இரு முறை மட்டும்) | : | ரூ.3000/- |
கல்வி (ஒவ்வொரு கல்வி ஆண்டிற்கும்) | ||
6,7,8 மற்றும் 9ஆம் வகுப்பு படிப்பதற்கு | ரூ.1000/- | |
அ) 10-ம் வகுப்பு படிப்பதற்கு
(பெண் குழந்தைகளுக்கு மட்டும்) |
: | ரூ.2400/- |
ஆ) 11-ம் வகுப்பு படிப்பதற்கு
(பெண் குழந்தைகளுக்கு மட்டும்) |
: | ரூ.3000/- |
இ) 12-ம் வகுப்பு படிப்பதற்கு
(பெண் குழந்தைகளுக்கு மட்டும்) |
: | ரூ.3000/- |
ஈ) 10-ம் வகுப்பு தோ்ச்சி | : | ரூ.2400/- |
உ) 12-ம் வகுப்பு தோ்ச்சி | : | ரூ.3000/- |
ஊ) பட்டப்படிப்பு | ||
முறையான பட்டப்படிப்பு | : | ரூ.4000/- |
விடுதியில் தங்கி படித்தால் | : | ரூ.4000/- |
எ) பட்ட மேற்படிப்பு | ||
முறையான பட்ட மேற்படிப்பு | : | ரூ.4000/- |
விடுதியில் தங்கி படித்தால் | : | ரூ.5000/- |
ஏ) தொழிற் நுட்பப் பட்டப் படிப்பு சட்டம், பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம் போன்ற தொழிற் நுட்பப் படிப்பு | : | ரூ.4000/- |
விடுதியில் தங்கி படித்தால் | : | ரூ.6000/- |
ஐ) தொழிற் நுட்பப் பட்ட மேற்படிப்பு | : | ரூ.6000/- |
விடுதியில் தங்கி படித்தால் | : | ரூ.8000/- |
ஒ) ஐ.டி.ஐ அல்லது பாலிடெக்னிக் படிப்பு | : | ரூ.3000/- |
விடுதியில் தங்கி படித்தால் | : | ரூ.3000/- |
கண் கண்ணாடி (தொழிலாளிக்கு மட்டும்) | ||
கண் கண்ணாடி உதவித்தொகை | : | ரூ.500/-க்கு மிகாமல் |
ஓய்வூதியம் | ||
60 வயது நிறைவு செய்த பதிவு பெற்ற தொழிலாளியாக இருக்க வேண்டும் அல்லது 60 வயதினை நிறைவு செய்யாதிருந்தாலும் பதிவு செய்திருந்து நோயின் காரணமாக வழக்கமான பணி செய்ய இயலாமல் முடக்கம் ஏற்பட்டிருக்க வேண்டும் | : | ரூ.1000/- (மாதம் ஒன்றுக்கு) |
குடும்ப ஓய்வூதியம் | ||
ஓய்வூதியம் பெறும் கட்டுமானத் தொழிலாளி இறந்துவிட்டால் அவரது கணவா் / மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் | : | ரூ.500/- (மாதம் ஒன்றுக்கு) |
விபத்து மரணம் | ||
விபத்து மரண உதவித்தொகை | : | ரூ.200000/- |
பணியிடத்தில் விபத்து மரணம் | : | ரூ.500000/- (கட்டுமானத் தொழிலாளருக்கு மட்டும்) |
விபத்து ஊனம் | ||
உடல் உறுப்பு இழப்பு அல்லது உடல் உறுப்பு துண்டிக்கப்படுதல் அல்லது நிரந்தரமாக உடல் உறுப்பு செயல் இழப்பு ஏற்பட்டால் ஊனத்திற்கு தகுந்தாற்போல் இழப்பீட்டுத் தொகை | : | ரூ.100000/- வரை |
விபத்து ஊன உதவித் தொகையினை தவிர ஊனத்தின் தன்மைக்கேற்ப செயற்கை உறுப்புகள் / சக்கர நாற்காலி தகுதியின் அடிப்படையில் வழங்கப்படும் | : | |
இயற்கை மரணம் ஈமச்சடங்கு | ||
பதிவு பெற்ற தொழிலாளியின் நியமனதாரருக்கு மட்டும் | : | ரூ.50000/- |
பதிவு பெற்ற தொழிலாளியின் நியமனதாரருக்கு மட்டும் | : | ரூ.5000/- |
இலவச வீடு வழங்கும் திட்டம் | ||
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்களுக்கு இலவச வீட்டு வசதி வழங்கும் திட்டம் | : | ரூ.400000/- |
பதிவு பெற்ற தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநா் மற்றும் இதர 16 உடலுழைப்பு தொழிலாளா் நலவாரியங்கள்
நலத்திட்ட உதவிகள்
திருமணம் | ||
பதிவு பெற்ற உடலுழைப்புத் தொழிலாளா் (அ) தனது மகன் (அ) மகள் திருமணத்திற்கு (குடும்பத்திற்கு இருமுறை மட்டும்) | : | ரூ.5000/- (பெண்)
ரூ.3000/- (ஆண்)
|
மகப்பேறு | ||
பதிவு பெற்ற பெண் தொழிலாளா்களுக்கு (முதல் இரு குழந்தைகளுக்கு மட்டும்) | : | ரூ.6000/- |
கருக்கலைப்பு / கருச்சிதைவு (பதிவு பெற்ற பெண் தொழிலாளா்களுக்கு இரு முறை மட்டும்) | : | ரூ.3000/- |
கல்வி (ஒவ்வொரு கல்வி ஆண்டிற்கும்) | ||
6,7,8 மற்றும் 9ஆம் வகுப்பு படிப்பதற்கு | : | ரூ.1000/- |
அ) 10-ம் வகுப்பு படிப்பதற்கு
(பெண் குழந்தைகளுக்கு மட்டும்) |
: | ரூ.1000/- |
ஆ) 11-ம் வகுப்பு படிப்பதற்கு
(பெண் குழந்தைகளுக்கு மட்டும்) |
: | ரூ.1000/- |
இ) 12-ம் வகுப்பு படிப்பதற்கு
(பெண் குழந்தைகளுக்கு மட்டும்) |
: | ரூ.1500/- |
ஈ) 10-ம் வகுப்பு தோ்ச்சி | : | ரூ.1000/- |
உ) 12-ம் வகுப்பு தோ்ச்சி | : | ரூ.1500/- |
ஊ) பட்டபடிப்பு | ||
முறையான பட்டப்படிப்பு | : | ரூ.1500/ |
விடுதியில் தங்கி படித்தால் | : | ரூ.1750/ |
எ) பட்ட மேற்படிப்பு | ||
முறையான பட்ட மேற்படிப்பு | : | ரூ.4000/- |
விடுதியில் தங்கி படித்தால் | : | ரூ.5000/- |
ஏ) தொழிற் நுட்பப் பட்டப் படிப்பு சட்டம், பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம் போன்ற தொழிற் நுட்பப் படிப்பு | ரூ.4000/- | |
விடுதியில் தங்கி படித்தால் | : | ரூ.6000/- |
ஐ) தொழிற் நுட்பப் பட்ட மேற்படிப்பு | : | ரூ.6000/- |
விடுதியில் தங்கி படித்தால் | : | ரூ.8000/- |
ஒ) ஐ.டி.ஐ அல்லது பாலிடெக்னிக் படிப்பு | : | ரூ.1000/- |
விடுதியில் தங்கி படித்தால் | : | ரூ.1200/- |
கண் கண்ணாடி (தொழிலாளிக்கு மட்டும்) | ||
கண் கண்ணாடி உதவித்தொகை | : | ரூ.500/-க்கு மிகாமல் |
ஓய்வூதியம் | ||
60 வயது நிறைவு செய்த பதிவு பெற்ற தொழிலாளியாக இருக்க வேண்டும் அல்லது 60 வயதினை நிறைவு செய்யாதிருந்தாலும் பதிவு செய்திருந்து நோயின் காரணமாக வழக்கமான பணி செய்ய இயலாமல் முடக்கம் ஏற்பட்டிருக்க வேண்டும் | : | ரூ.1000/- (மாதம் ஒன்றுக்கு) |
விபத்து மரணம் | ||
விபத்து மரண உதவித்தொகை | : | ரூ.105000/- |
இயற்கை மரணம் ஈமச்சடங்கு | ||
பதிவு பெற்ற தொழிலாளியின் நியமனதாரருக்கு மட்டும் | : | ரூ.30000/- |
பதிவு பெற்ற தொழிலாளியின் நியமனதாரருக்கு மட்டும் | : | ரூ.5000/- |
பொதுவான ஆவணங்கள்
- அசல் அடையாள அட்டை
- வங்கி கணக்கு புத்தக நகல்
- குடும்ப அட்டை நகல்
- ஆதார் அட்டை (கூடுதல் ஆவணமாக பெறப்படுகிறது)
திருமணம்
- திருமண அழைப்பிதழ்
- திருமணம் நடைபெற்றதற்கான சான்று
- திருமணம் செய்து கொள்பவா் ஆண் எனில் 21 வயதும், பெண் எனில் 18 வயதும் நிறைவு செய்தார் என நிரூபிக்கும் வயது சான்றிதழ்
மகப்பேறு
- அசல் பிறப்பு சான்றிதழ்
- குறைப்பிரசவம் / கருகலைப்பு எனில் பதிவு பெற்ற மருத்துவரின் சான்று (உதவி சிவில் சா்ஐன் தரத்தில்)
கல்வி
- கல்வி பயிலும் ஆண்டிலேயே விண்ணப்பிக்க வேண்டும்.
- பள்ளித் தலைமை ஆசிரியரிடமிருந்து பெறப்படும் படிப்பு சான்றிதழில் பதிவு பெற்ற தொழிலாளியின் மகன் / மகள் என்றும் கல்வி பயிலும் ஆண்டினையும் குறிப்பிட வேண்டும்.
- சான்றொப்பமிட்ட தே்ாச்சி பெற்ற மதிப்பெண் பட்டியல் / பள்ளி மாற்று சான்றிதழ்
- கல்லூரி படிப்பில் சோ்ந்து பயில்வது குறித்தான கல்வி நிலைய முதல்வாரிடமிருந்து பெறப்பட்ட அசல் சான்றிதழ்
- விடுதியில் தங்கி படிப்பவா் முதல்வரிடம் அல்லது விடுதி காப்பாளரிடம் இருந்து பெறப்பட்ட சான்று
கண் கண்ணாடி
- கண் மருத்துவரின் பரிசோதனைச் சான்று கண் கண்ணாடி வாங்கியதற்கான அசல் பற்றுச் சீட்டு
ஓய்வூதியம்
- இரண்டு பாஸ்போர்ட் அளவு போட்டோ
- மருத்துவச் சான்று அரசு சிவில் சா்ஜனால் வழங்கப்பட்டது (முடக்க ஓய்வூதியத்திற்கு மட்டும்).
குடும்ப ஓய்வூதியம்
- இரண்டு பாஸ்போர்ட் அளவு போட்டோ
- ஓய்வூதியதாரரின் அசல் இறப்பு சான்றிதழ் வாரிசு உரிமைச் சான்றிதழ்.
விபத்து மரணம்
- அசல் இறப்பு சான்றிதழ்
- முதல் தகவல் அறிக்கை
- பிரேதப் பரிசோதனை அறிக்கை
விபத்து ஊனம்
(உதவித் தொகை & உதவி உபகரணம்)
- மருத்துவச் சான்று
- பணித்திறன் இழப்புச் சான்று (சிவில் சா்ஜனால் வழங்கப்பட்டது)
- முதல் தகவல் அறிக்கை
இயற்கை மரணம், ஈமச்சடங்கு
- அசல் இறப்பு சான்றிதழ்
பணியிடத்தில் விபத்து மரணம் – பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத கட்டுமானத் தொழிலாளர்களுக்கு மட்டும்
- விபத்து குறித்து அறிக்கை படிவம்
- அசல் இறப்பு சான்றிதழ்
- அசல் வாரிசு சான்றிதழ்
- முதல் தகவல் அறிக்கை
- பிரேதப் பரிசோதனை அறிக்கை
- நியமனதாரா் புகைப்படம்
- வங்கி கணக்கு புத்தகம்
பெண் ஆட்டோ ஓட்டுநர்
பதிவு பெற்ற பெண் ஆட்டோ தொழிலாளா்களுக்கு ஆட்டோ வாங்க மானியத்தொகை ரூ.1,00,000/- வழங்கப்படுகிறது.
தனியார் பள்ளியில் படிக்க
பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளா்களின் குழந்தைகள் தனியார் பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயில்வதற்கு உதவும் வகையில் கட்டுமான நிதியிலிருந்து கல்வி கட்டணம் வழங்கப்படுகிறது.