கல்விக் கடன் திட்டம்
ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு பட்டப் படிப்பினை உள்நாடு மற்றும் அயல் நாட்டில் பயில்வதற்காக NSFDC, NSTFDC மற்றும் NSKFDC போன்ற நிதி நிறுவனங்களிடமிருந்து குறைந்த வட்டியில் கடன் பெற்று மாணாக்கர்களுக்கு கல்வி கடன் வழங்கப்பட்டு வருகிறது.
முழுநேர படிப்புகளுக்கான மாணாக்கர்களுக்கு மிக குறைந்த வட்டியில் கல்விக் கடன் வழங்கப்பட்டு வருகிறது.
- ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு இந்திய நாட்டில் மற்றும் வெளி நாட்டில் கல்வி பயில அதிகபட்சமாக ரூ.40.00 இலட்சம் வரை கல்விக் கடன் வழங்கப்பட்டு வருகிறது.
- பழங்குடியினர் மாணாக்கர்களுக்கு இந்திய நாட்டில் மற்றும் வெளி நாட்டில் கல்வி பயில அதிகபட்சமாக ரூ.10.00 இலட்சம் வரை கல்விக் கடன் வழங்கப்பட்டு வருகிறது.
- தூய்மை பணியாளர்களின் மாணாக்கர்களுக்கு இந்திய நாட்டில் கல்வி பயில .
- ரூ.10.00 இலட்சம் மற்றும் வெளி நாட்டில் கல்வி பயில அதிகபட்சமாக ரூ.20.00 இலட்சம் வரை கல்விக் கடன் வழங்கப்பட்டு வருகிறது.
தகுதி
- ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் இனத்தவராக இருக்க வேண்டும்.
- குடும்ப ஆண்டு வருமானம் ஆதிதிராவிடர் மாணாக்கர்ளுக்கு ரூ.5.00 இலட்சம், பழங்குடியினர் மாணாக்கர்ளுக்கு ரூ.3.00 இலட்சம் மற்றும் தூய்மை பணியாளர்களின் மாணாக்கர்களுக்கு ரூ.4.50 இலட்சம் இருக்க வேண்டும்.
வட்டி விகிதம்
- ஆதிதிராவிட மாணாக்கர்களுக்கு – 6.5%
- பழங்குடியின மாணாக்கர்களுக்கு – 6%
- தூய்மை பணியாளர்களின் மாணவர்கள் இந்திய நாட்டில் கல்வி பயில-6% வெளி நாட்டில் கல்வி பயில -7% மற்றும் இந்திய நாட்டில் கல்வி பயில மாணவிகளுக்கு-5.5% வெளி நாட்டில் கல்வி பயில மாணவிகளுக்கு-6.5%
கடனை திரும்ப செலுத்தும் காலம்
- கல்வி கடன் பெற்ற மாதத்தில் இருந்து வட்டி பணம் மாதம் தோறும் செலுத்த வேண்டும்.
- படிப்பு முடித்த அல்லது வேலைக்கு செல்லுதல் இதில் எது முன்னதோ, அதிலிருந்து 5 ஆண்டுகளில் 60 தவணைகளில் கடனை திரும்ப செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறைமை (துறையின் இணையதளம் / இ-சேவை மையம்/ நேரடியாக)
இணையதள வாயிலாக விண்ணப்பிக்க: https://tel.tahdco.com/
மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள்
- சாதி சான்றிதழ்
- வருமான சான்றிதழ்
- ஆதார் அட்டை
- குடும்ப அட்டை
- திட்ட அறிக்கை
- விலைப்புள்ளி
விண்ணப்பிக்கும் முறைமை (துறையின் இணையதளம் / இ-சேவை மையம்/ நேரடியாக)
இணையதள வாயிலாக விண்ணப்பிக்க:https://newscheme.tahdco.com
பயனாளி:
-
பயன்கள்:
-
விண்ணப்பிப்பது எப்படி?
இதர விபரங்களுக்கு, தொடர்புக்கு
மாவட்ட மேலாளர்,
தாட்கோ,
அறை எண்.225, இரண்டாம் தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரியலூர்
தொலைபேசி எண் : 04329 -228315