தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்
நோக்கம்
கிராமப்புற ஏழைகளுக்கான ஒரு வலிமையான அமைப்பினை உருவாக்குவதன் மூலம் வாழ்வாதாரத்திற்கான வாய்ப்புகளை உருவாக்க , வருமானத்தை உயர்த்துதல், நிதி உள்ளாக்கம் மற்றும் பிற சேவைகளை வழங்குவதே இத்திடடத்தின் நோக்கமாகும். குழு அமைத்தல், பயிற்சி அளித்தல், ஆதார நிதி வழங்குதல், வங்கி கடன் இணைப்பு வழங்குதல், கிராம வறுமை ஒழிப்பு சங்கம் அமைத்தல் மற்றும் ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு அமைத்தல் மேலும் ஊனமுற்றோர் மற்றும் நலிவுற்றோர்க்கு தனி நபர் கடன் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மூலம் வழங்குதல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய காரணிகள்.
கிராம வறுமை ஒழிப்பு சங்கம்
கிராம வறுமை ஒழிப்பு சங்கம் அனைத்து ஊராட்சிகளிலும் அமைக்கப்பட்டது. அதில் 5 பழங்குடியினர் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது அதன் உறுப்பினர்களாக இலக்கு மக்கள் பட்டியலில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 30% ஆதிதிராவிடர்/பழங்குடியினர் உறுப்பினர்களாக உள்ளனர். மேலும் ஊனமுற்றோர், நலிவுற்றோர் மற்றும் இளைஞர்களும் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்.
ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு
ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் 1975 ன் கீழ் அமைக்கப்பட்டு பதிவு செய்யப்படுகிறது. ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு மகளிர் சுய உதவிக்குழு அமைத்தல் அதனை வலுப்படுத்துதல், வங்கி கடன் இணைப்பு ஏற்படுத்தி தருதல், மற்றும் இதர சேவைகள் செய்தல் போன்ற பணிகளை செய்கின்றன. அனைத்து ஊராட்சிகளிலும் ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளன.
சுய உதவிக்குழுக்கள்
இதுவரை சுய உதவிக்குழு அமைக்கப்படாத மக்களிடையே குழுக்கள் அமைப்பதும் சுய உதவிக்குழுவில் இதுவரை இணைக்கப்படாத மகளிரை குழுக்களில் இணைப்பதும் குறிப்பாக விதவைகள்,கணவனால் கைவிடப்பட்டவர்கள்,திருநங்கைகள்,நலிவுற்றோர் மற்றும் சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டவர்கள் ஆகியோரை சிறப்புக் கவனம் செலுத்தி சுய உதவிக்குழுக்களில் சேர்ப்பதும் நோக்கமாகும்.ஒத்த கருத்துடைய ஏழை மகளிர் தாமாகவே ஒன்று சேர்ந்து சேமிப்பினை பெருக்கிடவும்,குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து ஆலோசித்து ஒரு குறிப்பிட்ட தொகையினை வாரம் அல்லது மாதம் தோறும் சேமித்து தங்களுக்குள்ளேயே சிறுகடன் கொடுத்து உதவிக் கொள்ளும் ஒரு சிறிய அமைப்பதே சுய உதவிக் குழுவாகும்.இக்குழுவில் 12 லிருந்து 20 மகளிர் உறுப்பினர்களாக இருக்கலாம்,குழு உறுப்பினர்கள் 18 வயது முதல் 60 வயது உடையவர்களாக இருக்க வேண்டும்.
வங்கி கடன் இணைப்பு விபரம்
வங்கி கடன் இணைப்பில் 6 மாதம் நிறைவடைந்த குழுக்களுக்கு தர மதிப்பீடு செய்யப்படுகிறது. முறையான கூட்டங்கள், உறுப்பினர்களின் சேமிப்பு உள்கடனை திருப்ப செலுத்துதல், பதிவேடுகளை பராமரித்தல் ஆகிய காரணிகள் வங்கி கடன் இணைப்புக்கு தகுதிகளாகும். குழுக்களின் தேவை மற்றும் தகுதியின் அடப்படையில் வங்கி கடன் வழங்கப்படுகிறது. வங்கி கடனை முறையாக திருப்பி செலுத்தும் குழுக்களுக்கு அடுத்த வங்கி கடனை முறையாக திருப்பி செலுத்தும் குழுக்களுக்கு அடுத்த வங்கி கடன் இணைப்பு செய்யப்படகிறது.
அம்மா இருசக்கர வாகனத் திட்டம் (2017 18)
பணிபுரியும் பெண்கள் பணியிடங்களுக்கும் , பிற வேலைகளுக்கும் எளிதில் செல்லும் வகையில் இரு சக்கர வாகணங்கள் வாங்க 50 மானியம் அல்லது வண்டியின் விலையில் பாதியில் இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும்
மிகவும் பின் தங்கிய பகுதிகள் மற்றும் மலைவாழ் பகுதிகளில் வசிக்கும் பெண்கள், பெண்களை குடும்பத் தலைவராக கொண்ட குடும்பங்களில் உள்ள பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதவரற்ற விதவைகள் ஊனமுற்ற பெண்கள், 35 வயதிற்கு மேலாக திருமணமாகாத பெண்கள், ஆதிதிராவிடர்/பழங்குடியினர் மற்றும் திருநங்கைகளுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்திபொருட்களை சந்தைப் படுத்துதல்
மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புகளை சந்தைப் படுத்தவும் அவர்களின் வாழ்வாதார மேம்பாட்ற்கும் மாவட்ட அளவில் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மக்கள் மத்தியில் குறிப்பாக கல்லுரி மாணவர்களிடத்தில் விற்பனை செய்வதன் முலம் சந்தை வாய்ப்புடன் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் என்ற நோக்கில் அந்தந்த மாவட்டத்தில் உள்ள கல்லுரிகளில் குறைந்த பட்சம் 3 கல்லுரிகளில் காலேஜ் பஜார் என்ற விற்பனையுடன் கூடய கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம்
தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் நோக்கம் நகர்புற ஏழை குடும்பங்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதாகும்.ஏழை குடும்பங்களின் வறுமைகளை குறைத்து அவர்களுக்கு சுய வேலை வாய்ப்பு மற்றும் ஊதிய வேலை வாய்ப்புகள் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
புதிய குழுக்கள் அமைத்தல்:
நகர்புறத்தில் வறுமை கோட்டிற்கு கீழே உள்ள மக்களை கொண்டு மகளிர் சுய உதவிக்குழு அமைக்கப்படும்.புதிய குழுக்கள் அமைத்தல்,பயிற்சி அளித்தல்,முறையான பயிற்சி பெற்ற பிறகு அவர்களுக்கு சுழல் நிதியாக U}.10,000/- ஒவ்வொரு குழுவிற்கு வழங்கப்படும்.பகுதி அளவிலான குழு கூட்டமைப்பிற்கு சுழல் நிதியாக U}.50,000/- வழங்கப்படும்.
சுய வேலை வாய்ப்பு திட்டம் – தனிநபர் (SEP-I)
நகர்புற ஏழை மக்களின் தனி நபர் மற்றும் குழுக்களின் தேவைகளுக்கேற்ப நிதியுதவி ஏற்படுத்தி தருதல், சுய தொழில் வாய்ப்புகள் மற்றும் நுண்ணிய நிறுவனங்களை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துதல்,அவர்களின் திறமை மற்றும் பயிற்சிக்கேற்றார் போல் வங்கிகளின் மூலம் U}.2,00,000\-முதல் U}.10,00,000\- வரை நிதயுதவி வழங்கப்படுகிறது.
திறன் வளர்ப்பு மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி(ESTP)
நகர்புற ஏழை மக்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.சுய வேலை வாய்ப்பு மற்றும் ஊதியம் பெறும் வேலை வாய்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்களுக்கான பயிற்சி மூலப்பொருள்,பயிற்சியாளர்களின் செலவு,சுய தொழில் / வேலை வாய்ப்பிற்கான செலவு ஆகியவற்றிற்கு பயிற்சி தொகை வழங்கப்படுகிறது.
நிர்வாக அமைப்பு.
தொடர்பு முகவரி
திட்ட இயக்குநர்
மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்
இரண்டாவது தளம்,
மாவட்ட ஆட்சியரகம்,
அரியலூர்.
தொலைபேசி – 04329- 228505