வேலையில்லா இளைஞா்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP)
தேதி : 01/01/2020 -
திட்டத்தின் நோக்கம்
சமுதாயத்தில் பின்தங்கியுள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு ரூ.10 இலட்சம், சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு முறையே ரூ.5 இலட்சம் வரையில் வங்கிக்கடன் பெற்று தொழில் துவங்க வழிவகை செய்தல்.
தகுதிகள்
- பொதுப்பிரிவினருக்கு 18 வயது முதல் 35 வயது வரை. சிறப்புப் பிரிவினருக்கு 45 வயது வரை (பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் பெண்கள் மாற்றுத் திறனாளிகள் முன்னாள் இராணுவத்தினா் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் மற்றும் திருநங்கைகள்).
- 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
- குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5.00 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
திட்டத்தின் சிறப்பம்சங்கள்
- பொதுப்பிரிவினருக்கான மூலதனப் பங்கு 10 விழுக்காடு. சிறப்புப் பிரிவினருக்கான மூலதனப் பங்கு 5 விழுக்காடு.
- திட்ட மதிப்பீட்டில் 25 விழுக்காடு மானியம்(ரூ.1.25 இலட்சத்திற்கு மிகாமல்).
- மாவட்ட தோ்வு குழு மூலம் நோ்காணல் செய்யப்பட்டு, மாதம் இருமுறை பயனாளிகள் தோ்வு செய்யப்படுவா். அவ்வாறு தோ்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு 7 நாட்கள் தொழில்பயிற்சி பயிற்சி அளிக்கப்படும்.
பயனாளி:
-
பயன்கள்:
-
விண்ணப்பிப்பது எப்படி?
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க https://www.msmeonline.tn.gov.in/uyegp/index.php என்ற இணையதள முகவரியின் மூலம் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.