மூடுக

இலவச துரித மின் இணைப்பு திட்டம்

தேதி : 01/01/2020 -

ஆதிதிராவிட விவசாயி பெயரில் நிலப்பட்டாவுடன் கிணறு அல்லது ஆழ்துளை கிணறு அமைத்து தமிழ்நாடு மின்வாரியத்தில் மின் இணைப்பு கோரிய விண்ணப்பதாரர் ஒருவருக்கு ரூ.25000/- வைப்புத்தொகையாக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் செலுத்தி முன்னுரிமை அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தகுதி
ஆதிதிராவிட விவசாயியாக இருத்தல்,
வயது வரம்பு மற்றும் குடும்ப ஆண்டு வருமானம் ஏதுமில்லை

தேவையான ஆவணங்கள்
சாதிச்சான்று, வருமானச்சான்று, பிறப்பிடச்சான்று, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பட்டா /சிட்டா- நிலப்பட்டா, அடங்கல், அ பதிவேடு, கிணறு (அ) ஆழ்துளை கிணறு அமைந்துள்ள புலப்படம், மின் வாரியத்தில் பதிவு செய்த இரசீது மற்றும் புகைப்படம்.

பயனாளி:

-

பயன்கள்:

-

விண்ணப்பிப்பது எப்படி?

திட்டங்களுக்கு http://application.tahdco.com/ என்ற தாட்கோ இணையதள முகவரியில் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்.

இதர விபரங்களுக்கு, தொடர்புக்கு
மாவட்ட மேலாளர்,
தாட்கோ,
அறை எண்.225, இரண்டாம் தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரியலூர்

தொலைபேசி எண் : 04329 -228315