முகப்பு arrow அரசுத் துறைகள்arrow புது வாழ்வுத் திட்டம் Print  அச்சிடுக  

புதுவாழ்வு திட்டம் அரியலூர் மாவட்டம்.

அறிமுகம்

புதுவாழ்வு திட்டமானது உலக வங்கி நிதி உதவியுடன், ஆற்றலை மேம்படுத்தி வறுமை ஒழிக்கக்கூடிய திட்டமாக, தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை மூலம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் முதல் கட்டமாக  ரூ.717 கோடி மதிப்பீட்டில் நவம்பர் 2005ல் 16 மாவட்டங்களில் 70 ஊராட்சி ஒன்றியங்களில் 2509 கிராம ஊராட்சிகளில் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இரண்டாம் கட்டமாக ஜூன் 2011ல் ரூ.950 கோடி மதிப்பீட்டில் 10 மாவட்டங்களில் 1616 கிராம ஊராட்சிகளில் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்தமாக 26 மாவட்டங்களில் 120 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 4125 கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்பட்டு கொண்டு வருகிறது. 

        நமது அரியலூர் மாவட்டத்தில் செயங்கொண்டம், தா.பழூர், செந்துறை மற்றும் திருமானூர் ஆகிய நான்கு ஒன்றியங்களில் 134 ஊராட்சிகளில் ஜூன் 2011 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திட்டத்தின் நோக்கம்:

வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வறுமையை ஒழிப்பதன் மூலம் ஏழை மக்களின் ஆற்றல் மேம்பாடு அடைவதற்காக-

1.     ஏழை எளிய மக்களின் நலனுக்காக செயல்படும் மக்கள் அமைப்புகளை கிராமங்கள் அளவில் உருவாக்குதல்.

2.     மக்களின் திறன்களை வளர்ப்பதற்கு வழிகாட்டுதல்.

3.     வாழ்வாதார மேம்பாட்டிற்கு மக்களுக்கு தேவையான தொழில்களில் நிதி உதவியுடன் முதலீடு செய்து சந்தைப்படுத்துதல்.

இலக்கு :

ஏழை குடும்பங்கள், மாற்றுத் திறனுடையோர் மற்றும் ஒதுக்கப்பட்டோரை உள்ளடக்கிய மிகவும் நலிவுற்றோர், இத்திட்டத்தின் மூலம் பயனடையக்கூடிய மக்கள் ஆவார்கள்.

திட்டத்தின் கொள்கைகள்

இத்திட்டத்தின் அனைத்து செயல்பாடுகளும் மறுக்க இயலாத கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டது. அவையாவன

1.     மிகவும் ஏழை மற்றும் மாற்றுத் திறனாளிகளை திட்டத்தி்ல் இணைத்தல் திட்ட நிதியில் 90 விழுக்காடு அனைத்து ஏழைகளுக்கும், நலிவுற்றோருக்கும் கிடைத்திட வழிசெய்தல்.

2.     பின்தங்கிய பெண்களுக்கு சரிவிகித அளவில் திட்ட பயன்.

3.     பங்கேற்பு அனைத்து முடிவுகளும் குறைந்தது 60 விழுக்காடு ஏழை மக்களின் பங்கேற்புடன் எடுத்தல்.

வட்டார வழிநடத்துனர் அணி இது 10 முதல் 15 கிராம ஊராட்சிகளுக்கு ஒன்றாகும். மேலும் கிராம ஊராட்சி அளவில் ஒரு முழுமையான சமூகம் சார்ந்த அமைப்பு. அதாவது கிராம ஊராட்சி வறுமை ஒழிப்பு சங்கம் இத்திட்டத்திற்கு முழு அளவில் பொறுப்பேற்றுக் கொள்கிறது.

சமூக ஒருங்கிணைப்பு துவக்க செயல்பாடுகள்

இத்திட்டமானது மக்கள் தேவைகளை முன்னிலைப்படுத்தி மக்கள் பங்கேற்புடன் அனைத்து நிலைகளிலும் செயல்படுத்தப்படுகிறது. திட்ட துவக்கநிதி செயல்பாடுகளில் முதலாவதாக ஏழை, எளிய () மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மக்கள் ஒருங்கிணைப்பு செய்யப்படுகிறார்கள். பின் அவர்களின் திறன்களை வளர்த்து  மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படுகிறது.

திட்டம் குறித்து விழிப்புணர்வு தகவல் பிரச்சாரம் முதலில் மக்களுக்கு அளித்தல்.

மக்கள் பங்கேற்புடன் பயனாளிகளை அடையாளம் காணல்.

கிராம சபை ஒப்புதல் பெறப்பட்டு பஞ்சாயத்து துவக்க நிதி அளித்தல்.

 கிராம ஊராட்சி வறுமை ஒழிப்பு சங்கம் (கி...)

கிராம வறுமை ஒழிப்பு சங்கம், கிராம அளவில் திட்டத்தை செயல்படுத்தும்  முக்கிய அமைப்பாக உள்ளது. இது ஒரு மக்கள் அமைப்பு ஆகும். இலக்கு மக்களில் இருந்து ஒரு பெண் சுயஉதவி குழு உறுப்பினர் அந்தக் குக்கிராம அளவில் பிரதிநிதித்துவம் பெறுவர். மேலும் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பிலிருந்து நிர்வாகி, மாற்றுத் திறனுடையோர் பிரதிநிதி, 2 இளைஞர்களை கிராம சபை கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு பரிந்துரை செய்யும். கிராம ஊராட்சி தலைவரே இக்குழுவிற்குத் தலைவராக செயல்படுவார்.

சமூக தணிக்கை குழு

கிராம சபை சமூக தணிக்கை குழுவினை அமைத்து, திட்டத்தின் கோட்பாடுகளை சரிவர, முறையாக பின்பற்றப்படுவதை கண்காணித்து அனைத்து திட்ட செயல்பாடுகளுக்கும் பாதுகாவலராக இருந்து உறுதிபடுத்துகிறது. சமூக தணிக்கை குழு , கிராமசபாவிற்கு கட்டுப்பட்டு தொடர்ந்து தனது அறிக்கையை அளிக்கும்.

கிராம வறுமை ஒழிப்பு சங்க திட்டம் தயாரித்தல்:

கிராம வறுமை ஒழிப்பு சங்கம் அமைக்கப்பட்டபின் தனது திட்டத்தினை தொலை நோக்கு அடிப்படையில் தயாரிக்கும். இதற்கு திட்ட பணியாளர்கள் வழி நடத்தி உதவி புரிவர். கிராம வறுமை ஒழிப்பு சங்க திட்டம் தயாரிக்கப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்ட பின் திட்டத்தின் முதல் தவணையான கிராம வறுமை ஒழிப்பு சங்க நிதி அனுமதிக்கப்படுகிறது.

சுய உதவி குழுக்கள் (SHG

சுய உதவி குழுக்களானது மாற்றுத்திறனாளிகள் எனில் 5-10 நபர்களும், ஏழை மக்கள் எனில் 10-20 நபர்களும் கொண்டு அமைக்கப்படுகிறது. இக்குழு உறுப்பினர்களுக்கு தங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ள பயிற்சியும், பணத்தை சேமிக்கும் ஆர்வமும் தரப்படுகிறது. மேலும் வங்கிகளிலும், அரசு திட்டங்களிலும் இக்குழுக்களை இணைத்து கடனுதவி பெற்றுத் தந்து வாழ்வாதார திட்டங்களை துவக்க, வழிவகை செய்யப்படுகிறது.

போதுமான அளவிற்கு வழிகாட்டுதலுடன், திட்டத்தால் உருவாக்கப்பட்ட சமூக சுய உதவிக்குழு பயிற்றுனர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.


ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் செயல்பாடுகள் மற்றும் நிலை

 திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட புதிய சுய உதவிக்குழுக்கள் மற்றும் சிறப்பாக செயல்படகூடிய குழுக்களை இணைத்து ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு தமிழக அரசின் தமிழ்நாடு கூட்டுறவு பதிவு சங்கங்களின் சட்டம் 1975ன்படி பதிவு செய்யப்படுகிறது () மறு சீரமைப்பு செய்யப்படுகிறது. இதன் பின்னர் அமுதசுரபி நிதி (வாழ்வாதார நிதி) அனைத்து கூட்டமைப்புகளுக்கும் வழங்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கவனம்

இத்திட்டத்தில் மாற்றுத் திறனுடையோர்களையும், நலிவுற்றோர்களையும் தீவிரமாக ஒருங்கிணைத்து அமைப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் அவர்கள் ஆற்றல் மேம்படுத்தி மற்றவர்களை போல் வாழ வைக்க முடியும். மேலும் வாழ்வாதார வாய்ப்புகளை ஏற்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதன் மூலம் அவர்களுடைய சுய மரியாதையை, தன்னம்பிக்கையை மீட்க முடியும். மாற்றுத் திறனாளிகளும், நலிவுற்றோர்களும், மலைவாழ் மக்களும், இத்திட்டத்தில் எளிதில் அணுகி மற்றவர்களைப் போல் பயனடைய முடிகிறது. கி.... மூலம் கடன் உதவி தரப்பட்டு அவர்களுக்கு வாழ்வாதார செயல்கள் துவங்க நிதியும், உதவியும் வழங்கப்படுகிறது.

அமுத சுரபி

சுய உதவி குழுக்களுக்கு தரப்படும் சுழற்சி நிதி மற்றும் வங்கிக்கடனுக்கு இணையாக, மேலும் ஒரு நிதி வளமே அமுத சுரபி ஆகும்.

 • கிராம வறுமை ஒழிப்புச் சங்கம் மூலம் ரூ.14 லட்சம் அமுத சுரபி கையிருப்புத் தொகையாக, சுய உதவிக் குழுக்களின் பொருளாதார செயல்களுக்குத் தரப்படுகிறது.

இத்தொகையானது கிராம வறுமை ஒழிப்புச் சங்கம் சார்பாக கிராம ஊராட்சி அளவிலான கூட்டமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.

கிராம ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள்(கி...கூ. ), சுய உதவி குழுக்களுக்கு குறைவான வட்டியில் கடன், இலக்கு மக்களுக்கு முன்னுரிமை அளித்து தரப்படுகிறது.

கிராம ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு அரசு வரையறையின்படி, தமிழ்நாடு சங்கங்கள் சட்டம் 1975ன்படி பதிவு செய்யப்பட்டு கார்பஸ் தொகை நிர்வகிக்க வேண்டும்.

மாற்றுத் திறனாளிகளுக்கும், நலிவுற்றோர்களுக்கும் புதுவாழ்வு திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. கி... மூலம் தனிநபர் கடன் கணிசமான அளவில் தரப்படுகிறது.

மாற்றுத் திறனை அளத்தல்

தேசிய அடையாள அட்டை

உபகரணங்கள்

மாற்றுத் திறனாளிகள் சுய உதவிக்குழு

மருத்துவ உதவி

தொழிற் பயிற்சி

தனிநபர் கடன்

தொழிற் குழு

முதியோர் உதவி தொகை

காப்பீட்டு்த் திட்டம்

வாழ்வாதார மேம்பாடு

ஏழை மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு இத்திட்டம் மூன்று வழிமுறைகளை மேற்கொள்கிறது.

திறன் வளர்ப்பு பயிற்சி

வேலை வாய்ப்புள்ள திறன் வளாப்பு பயிற்சியின்மூலம் இளைஞர்களுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை வாய்ப்பும், சுய வேலை வாய்ப்பும் கிடைக்க வழிவகை செய்கிறது.

வாழ்வாதார ஒத்த தொழில் குழு (CLG)

ஒரே மாதிரியான தொழில் செய்யும் நபர்களை ஒன்று சோ்த்து வாழ்வாதார ஒத்த குழு துவங்கப்படுகிறது. இக்குழு சந்தைபடுத்துவதற்கும், கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும், தொழில் மேம்படுத்துவதற்கும் உதவுகிறது.

மாவட்ட மக்கள் கற்றல் மையம்( ம.க.மை) :

திட்ட இலக்கு சமூகத்தில் இருந்து பல்வேறு சிறப்பு சமூக மூலதனம் ஒரு பரவலான உருவாக்கியுள்ளது. அவர்கள் பயிற்சி மற்றும் CBOs வலுப்படுத்தும் திட்டம் உதவ " மாவட்ட மகமை" என்று ஒரு சமூக வள மையம் ஒரு அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட மகமை, கிராம வறுமை ஒழிப்பு சங்கம் / ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு / பொது சேவை மையம் அதன் சேவைகளை வழங்குகிறது, மேலும் மற்ற அரசு முகவர் ஆதரிக்கிறது. சமூக வல்லுர் சேவைகள் காண்பிக்கப்பட்ட நிறுவனத்துக்கு இதன் செலுத்தும் பயன்படுத்தப்படுகின்றன. மாவட்ட மகமை CBOs அதாவது

1. நிறுவன மேம்பாடு

2.சேமிப்புகள் மற்றும் கடன்

3.சமூக வல்லுநர்

4.வாழ்வாதார தனிச்சிறப்படையச் நடவடிக்கைகள் மையமாக நான்கு அலகுகள் கொண்ட. -பொது சேவை மையம்:

  பொதுவான சேவை மையங்கள் அனைத்து 134 கிராம ஊராட்சிகளுக்கு மற்றும் செயங்கொண்டம் தா.பழூர்,செந்துறை மற்றும் திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நிறுவப்பட்டுள்ள பொது சேவை மையங்கள் வருவாய் துறை சான்றிதழ், சமூக நலன்புரி திட்டத்தின் நன்மைகள் ஆன்லைன் மூலம் பயன்படுத்த முடியும், ஈபி பில் கட்டணம், காப்பீடு பிரீமியம் மற்றும் ஆதார் தொடர்பான சேவைகள் வழங்கப்படுகின்றன. இளைஞர்கள் ஆன்லைனில் பணம் முதலியன பயணம் ஆய்வு பொருட்கள், திட்டம் பெறுவது மற்றும் செலுத்தும், பொது தேர்வு முடிவுகள், தொலை மருத்துவம் விவரங்கள் மையங்களில் பயன்படுத்த குழு சேவை தோ்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.

சமூக மூலதனம் உருவாக்குதல்

தங்களுக்கு கிடைத்த அனுபவங்களை மற்ற கிராமங்களுக்கும், தங்கள் கிராமத்திலேயே பயிற்சி தரக்கூடிய திறனை வளர்ப்பதும் இத்திட்டத்தின் மிக முக்கியமான அம்சமாகும். இந்த சமூக மூலதனம் குறுகிய காலத்தில், திட்டத்தை மிகப்பெரிய அளவில் கொண்டு செல்ல உதவுகிறது.

·         இத்திட்டத்தில் சமூக வல்லுநர்கள் பயிற்றுனராக உருவாக்கப்பட்டு, மற்ற திட்ட கிராமங்களுக்கும் மற்ற துறைகளுக்கும் உள்ளனர்.

·         அவர்களுக்கு அமைப்பு ரீதியாக உதவி செய்யும் பொருட்டு, சமூக வல்லுநர்கள் கற்றல் மற்றும் கற்பித்தல் மையம் உருவாக்கப்பட்டு அவர்களாலேயே நிர்வகிக்கப்படுகிறது. (மகமை)

·         மக்கள் கற்றல் மையம் (மகமை) மற்ற உறுப்பினர்களுக்கு தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும், சமூக சார்ந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் அடித்தளமாக உள்ளது.

·         264 சமூக வல்லுநர்கள் உருவாக்கப்பட்டு மற்ற திட்ட கிராமங்களுக்கு பயனுள்ள வகையில் சேவை புரிகின்றனர்

சாதனைகள்

VPRC,PLF and CLG  நிதி

CBOs

இலக்கு

சாதனை

இலக்கு

சாதனை

கிராம வறுமை ஒழிப்பு சங்கம்

146

146

1881.00

2313.62

ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு

146

146

1747.20

1747.20

வாழ்வாதார ஒத்த தொழில் குழு

136

136

121.14

121.14

 சுய உதவி குழுக்கள்

 

             செயல்பாடு

நிதி

ஆண்டு

இலக்கு

சாதனை

இலக்கு

சாதனை

2016-17

1460

548

2800

1252.50

2015-16

1515

1729

2600

3357.02

2014-15

1506

1914

2200

2541.98

2013-14

1437

1068

2500

1964.94

2012-13

1190

1190

1500

1504.75

இளைஞர் தொழில் திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு

 

             செயல்பாடு

நிதி

ஆண்டு

இலக்கு

சாதனை

இலக்கு

சாதனை

2016-17

3000

9566

496.35

401.15

2015-16

3000

7800

496.35

250.43

2014-15

3000

5065

357.81

117.05

2013-14

2500

2985

206.72

46.84

மாற்றுத்திறனாளிகளுக்கு தனிநபர் கடன் வழங்கிய விபரம் 2012-13 முதல் 2015-16 வரை

 

             செயல்பாடு

நிதி

விபரம்

இலக்கு

சாதனை

இலக்கு

சாதனை

a. மாற்றுத்திறனாளிகள்

7834

7521

476.64

494.02

b.நலிவுற்றோர்

6468

6239

381.68

363.09

.பொது சேவை மையம் 

சேவைகள்

ஆகஸ்ட  2016 வரை சாதனை

மின் ஆளுமை சான்றிதழ்

21168

மின் வணிகம் சான்றிதழ்

792

மின்சார கட்டணம் செலுத்தியது

1305

ஆதார் எண்ணை பயன்படுத்தி வங்கி கணக்கிலிருந்து பணம் பெறும் சேவை

115

 

 

 

   தொடர்பு முகவரி

மாவட்ட திட்ட மேலாளர்

புதுவாழ்வு திட்டம்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.

இரண்டாவது தளம்.

அரியலூர்.

தொலைபேசி எண் 04329 – 228044

நிகரி -      04329-228044

மின்னஞ்சல் -   aripvds@yahoo.in

 

நன்றி.


Go to Topமுகப்பு | இணையதளக் கொள்கைகள் | விதிமுறைகளும், நிபந்தனைகளும் | அணுகத்தக்க விருப்பங்கள் | உதவி | கருத்து | தொடர்பு கொள்ள | தள வரைபடம்

பொருளடக்க உரிமை, பராமரித்தல் மற்றும் மேம்படுத்தல் மாவட்ட நிர்வாகம், அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு