முகப்பு arrow அரசுத் துறைகள் arrow வேளாண்மை Print  அச்சிடுக  
   |  வேளாண்மை  |  மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை  |       |     |     |  புகைப்பட தொகுப்பு

வேளாண்மை

அரியலூர் மாவட்டத்தினுடைய பொருளாதாரத்தின் பிரதான பிரிவாக வேளாண்மைத் தொழில் தொடர்ந்து இருந்து வருகிறது. 70 சதவிகித மக்கள் தங்களுடைய வாழ்வாதாரமாக வேளாண்மை மற்றும் அதன் தொடர்புடைய தொழில்களை செய்து வருகிறார்கள். மாவட்டத்தினுடைய மொத்த பரப்பானது 1933.38 சதுர கிலோ மீட்டராகும். இதில் மொத்த பயிர் பரப்பானது 1.118 இலட்சம் எக்டராகும். நிலையான வேளாண்மை உற்பத்தி, நீடித்த வேளாண்மையில் உற்பத்தி அதிகரிப்பு, வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு தேவையை பூர்த்தி செய்தல், வேளாண் சார்ந்த தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்கள் தேவையை பூர்த்தி செய்தல் மற்றும் ஊரக மக்கள் தொகைக்கு வேலை வாய்ப்பினை அளித்தல் ஆகியவையே வேளாண்மைத் துறையின் முக்கிய கொள்கையாகவும், கோட்பாடாகவும் இருந்து வருகிறது.

பல வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலமாகவும் அது சம்மந்தமான தொழில் நுட்பங்களை விளம்பரப்படுத்துதல் மூலமாகவும் வேளாண்மை துறையானது உணவு உற்பத்தியில் அபரிமிதமான வளர்ச்சியினை அடைவதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு உற்பத்தியினை அதிகப்படுத்தும் நோக்கோடு செயல்பட்டு வருகிறது. தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம், விதை கிராம திட்டம் தேசிய எண்ணெய் வித்துக்கள் மற்றும் எண்ணெய் பனை இயக்கம், தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு பருத்தி சாகுபடி இயக்கம், தேசிய நீடித்த வேளாண்மை இயக்கம், மண் வள அட்டை இயக்கம், மண் வளத்தை உயிர் உரங்கள் கொண்டு மேம்படுத்துதல், பசுந்தாள் உரம், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாக தொழில் நுட்பங்கள் ஆகிய திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பயிர் பரவலாக்கம் மூலம் அதிக வருமானம் கிடைப்பதோடு, மதிப்பு கூட்டப்பட்ட வேளாண் பொருட்கள் கிடைப்பதனால் உழவுத் தொழில் செய்பவர்களுடைய பொருளாதார நிலை உயருகின்றது.

அரியலூர் மாவட்டத்தினுடைய மொத்த புவியியல் பரப்பானது 193338 எக்டராகும். இதில் பயிர் சாகுபடி பரப்பானது 111874 எக்டராகும். மேலும் இவற்றில் 45136 எக்டர் நீர் பாசனம் பெறும் பகுதியாகும். மீதமுள்ள 66738 எக்டர் மானாவாரி பகுதியாகும். காவிரி நதி கிளைகள் மூலம் 10389 எக்டர் திருமானூர், தா.பழூர் மற்றும் ஜெயங்கொண்டம் வட்டாரம் பாசனம் பெறுகின்றது. சராசரி வருடாந்திர மழை அளவானது 954 மி.மீஆகும். அரியலூர் மாவட்டத்தில் பலவகையான பயிர்கள் சாகுபடி செய்யப்படுவதால் இம்மாவட்டத்தினுடைய மக்களுக்கு வேளாண்மை பிரதான தொழிலாக திகழ்கிறது.

குறிக்கோள்:

       விவசாயிகளுக்கு அன்றாடம் வேளாண் சம்மந்தப்பட்ட ஆலோசனைகளை வழங்குதல், தரமான விதைகள் வழங்குதல், தரமான இரசாயன உரங்களை கிடைக்கச் செய்வதோடு அதன் விநியோகத்தை கண்காணித்தல், உயிர் உரங்கள், உயிர் பூச்சிக் கொல்லிகள் மற்றும் சமீபத்திய ஆராய்ச்சி நிறுவனங்களின் தொழில் நுட்பங்களை கிடைக்கச் செய்வதன் மூலம் உணவு உற்பத்தியை அதிகரிப்பதோடு வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கேற்ப மூலப்பொருட்களின் உற்பத்தியினை பூர்த்தி செய்து வேளாண் சார்ந்த தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்களை வழங்கும் பணிகளை வேளாண்மைத் துறை செய்து வருகிறது.

நோக்கம்:

1. வேளாண்மைப் பயிர்களின் சாகுபடி பரப்பினை நிலைப்படுத்துதல்.
2. வேளாண் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரித்தல்.
3. இரண்டு மடங்கு உற்பத்தி மூன்று மடங்கு வருமானம் விவசாய குடும்பங்களுக்கு கிடைக்கச் செய்தல்.

துறையின் தோற்றம்:

       மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், அரசாணை எண். (MS) 74 வேளாண்மைத்துறை, நாள்: 26.04.2012-ன்படி தனியாக தோற்றுவிக்கப்பட்டு 01.07.2012 முதல் செயல்பட்டு வருகிறது.

மழையளவு:

        சராசரி மழையளவானது 954 மி.மீ ஆகும். இம்மாவட்டம் அனைத்து பருவகாலங்களிலும் மழை பெறுகின்றது. இருப்பினும் அதிகமான மழையளவு வடகிழக்கு பருவமழை மூலம் கிடைக்கப்பெறுகின்றது. அட்டவணை-1 ( 7 வருட மழையளவு புள்ளி விவரம் 2009-2016).

வேளாண் காலநிலை மண்டலம் :

          தமிழ்நாடு 7 பெரிய வேளாண் காலநிலை மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் மண்டல எண் -V. அதாவது காவிரி டெல்டா மண்டலம் (CDZ). வெப்பநிலை அதிகபட்சமாக 38oC-லிருந்து குறைந்தபட்சமாக 24oC வரை நிலவி வருகிறது.

மண் வகைகள்:

        சுண்ணாம்புக்கல் கலந்த இரும்பு சத்து மிகுந்த செந்நிற களிமண் (Ferruginous red loam) -ஆக அரியலூர் மாவட்டத்தினுடைய நிலத்தின் தன்மையாக உள்ளது. மண்ணின் தன்மை பொதுவாக களிமண் ஆகவும், சிவப்பு நிறமாக மேற்பகுதியிலும், மஞ்சள் நிறமாக அடிப்பகுதியிலும் காணப்படுகிறது. மண்ணின் மத்திய ஆழத்தில் நல்ல வடிகால் வசதியும், உப்பு மற்றும் காரத் தன்மை இல்லாமலும் PH 6.5-லிருந்து 8 வரையிலும் காணப்படுவதுடன் அங்ககத் தன்மை தழைச்சத்து மற்றும் மணிச்சத்து அளவு குறைந்தும் மற்றும் பொதுவாக சாம்பல் சத்து மற்றும் சுண்ணாம்பு அளவு அதிகமாகவும் காணப்படுகிறது.
       செந்துறை
, தா.பழூர், ஆண்டிமடம் மற்றும் ஜெயங்கொண்டம் வட்டாரங்களில் செம்மை சரளைமண் காணப்படுகிறது. திருமானூர் மற்றும் அரியலூர் வட்டாரங்களில் கரிசல் மண் காணப்படுகிறது.

பாசன ஆதாரங்கள் :

     வாய்க்கால், குளம், ஆழ்குழாய் கிணறு மற்றும் திறந்தவெளி கிணறுகள் ஆகியன இம்மாவட்டத்தினுடைய பாசனத்திற்கான ஆதாரங்களாகும். இதில் அதிகப்பகுதிகள் குழாய் கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறு மூலம் பாசனம் பெறுகின்றன.         

 அட்டவணை - 2

வாய்க்கால் பாசனம்:

          இம்மாவட்டம் டெல்டா மாவட்ட நிலையின் கீழ் வருகின்றது. 41 வருவாய் கிராமங்கள் டெல்டா பகுதியின் கீழ் வருகின்றது. திருமானூர், தா.பழூர் மற்றும் ஜெயங்கொண்டம் வட்டாரங்களில் மூன்று வகையான வாய்க்கால் பாசனத்தின் மூலம் நெல் மற்றும் கரும்பு பயிர்கள் பாசனம் பெறுகின்றன.

புள்ளம்பாடி வாய்க்கால்:

          இந்த வாய்க்கால் முக்கொம்பிலிருந்து துவங்குகிறது. இதன் நீளம் 36 கி.மீ ஆகும். இது 5 வகையான பாசன குளங்களை இணைக்கிறது. மேட்டூர் அணை 90 அடி நீர் அளவினை எட்டும்போது ஆகஸ்ட் முதல் தேதியன்று இவ்வாய்க்கால் மூலம் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுகிறது. திருமானூர் வட்டாரத்தில் 6000 எக்டர் நிலங்கள் இவ்வாய்க்கால் மூலம் பாசனவசதி பெறுகின்றது. 

நந்தியாறு:

          திருச்சி மாவட்டம் லால்குடி வட்டாரத்திலுள்ள நத்தமாங்குடி கிராமத்திலிருந்து இவ்வாய்க்கால் துவங்குகிறது. இதனுடைய நீளம் 14 கி.மீ. ஆகும். இந்த வடிகால் வாய்க்கால் பெருவளை மற்றும் புள்ளம்பாடி வாய்க்கால் மூலம் கிடைக்கப்பெறுகின்ற வடிகால் நீரை பெறுகின்றது. திருமானூர் வட்டாரத்தில் 2000 எக்டர் நிலங்கள் இவ்வாய்க்கால் மூலம் பாசனவசதி பெறுகின்றது.

பொன்னாறு:

          திருமானூர் வட்டாரத்திலுள்ள குருவாடி கிராமத்தின் கொள்ளிடம் ஆற்றிலிருந்து  இந்த வாய்க்கால் துவங்குகிறது. இதன் நீளம் 36 கி.மீ. ஆகும். 5 பாசன குளங்களை இணைக்கிறது. தா.பழூர் வட்டாரத்தில் 1877 எக்டர் நிலங்கள் இவ்வாய்க்கால் மூலம் பாசன வசதி பெறுகின்றது.

வடவாறு:

          தா.பழூர் வட்டாரத்தில் கொள்ளிடம் ஆற்றினுடைய கீழ்க்கட்டளை அணையிலிருந்து இந்த வாய்க்கால் துவங்குகிறது. இதன் நீளம் 6 கி.மீ. ஆகும். ஜெயங்கொண்டம் வட்டாரத்தில் 463 எக்டர் நிலங்கள் இவ்வாய்க்கால் மூலம் பாசனவசதி பெறுகின்றது.

பிரதான வேளாண்மைப் பயிர்கள்:

          நெல், மக்காச்சோளம், பருத்தி, நிலக்கடலை மற்றும் கரும்பு பயிர்கள் பிரதான பயிர்களாக இம்மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படுகிறது. மொத்த இயல்பான சாகுபடி பரப்பு 76000 எக்டர் ( அட்டவணை - 3). வட்டார அளவிலான இயல்பான சாகுபடி பரப்பு (அட்டவணை - 4). கடந்த 7 ஆண்டுகளில் பயிர்சாகுபடி விவரம் ( அட்டவணை - 5).

துறை அமைப்பு:

மாவட்ட அளவிலான துறை அமைப்பு:

          வேளாண்மைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படுகின்ற அனைத்து திட்டங்களையும் கண்காணித்தல், மேற்பார்வையிடுதல் மற்றும் செயல்படுத்தும் அதிகாரியாக வேளாண்மை இணை இயக்குநர் அவர்கள் செயல்படுகிறார். மேலும் வேளாண்துறையுடன் தொடர்புடைய அனைத்து சகோதரத் துறைக்கும் தொடர்பு அதிகாரியாக செயல்படுகிறார்.

 வட்டார வாரியான துறை அமைப்பு:

          அரியலூர் மாவட்டத்தில் வட்டார அளவில் 6 வேளாண்மை விரிவாக்க மையங்கள் செயல்படுகின்றன. ஒவ்வொரு வேளாண்மை விரிவாக்க மையத்தின் தலைமை அலுவலராக வேளாண்மை உதவி இயக்குநர் செயல்படுகிறார். அனைத்து திட்டங்களும் வட்டார அளவில் செயல்படுத்தப்படுகின்றன. வட்டார அளவில் வேளாண்மை உதவி இயக்குநர் அவர்களின் கட்டுப்பாட்டில் வேளாண்மை அலுவலர் மற்றும் துணை வேளாண்மை அலுவலர் செயல்படுகின்றனர். வேளாண்மை அலுவலர் அவர்களின் கட்டுப்பாட்டில் 3 உதவி வேளாண்மை அலுவலர்களும் மற்றும் துணை வேளாண்மை அலுவலர் அவர்களின் கட்டுப்பாட்டில் 2 உதவி வேளாண்மை அலுவலர்களும் பணிபுரிகின்றனர். உதவி விதை அலுவலர் விதைப் பண்ணைகளை அமைத்து அந்தந்த வட்டாரத்திற்கு தேவையான நெல், பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துப் பயிர்களின் விதைகளை கொள்முதல் செய்வார். கிடங்கு மேலாளர் விதை மற்றும் பிற வேளாண் இடுபொருட்களை விவசாயிகளுக்கு விற்பனை செய்வார்.

உள்கட்டமைப்பு வசதிகள்:

1. ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம்:

          வேளாண்மை மற்றம் அதன் தொடர்புடைய துறைகளான தோட்டக்கலை வேளாண் வணிகம் மற்றும் விற்பனை விதைச்சான்று அளிப்பு மற்றும் வேளாண்மை பொறியியல் துறைகள் மூலம் கிடைக்கப்பெறும் சேவைகள் மற்றும் இடுபொருட்களை விவசாயிகள் ஒரு கூரையின் கீழ் பெறும்பொருட்டு இம்மையம் செயல்படுகிறது.  

இம்மையங்கள் செயல்படும் இடங்கள்:

1. திருமானூர் இருப்பு கீழப்பழூர்
2. ஜெயங்கொண்டம் இருப்பு ஜெ.தத்தனூர்.
3. ஆண்டிமடம் இருப்பு விளந்தை.

2. வேளாண்மை விரிவாக்க மையங்கள்:

          பிரதான வேளாண்மை விரிவாக்க மையங்கள் ( வட்டார அளவில் )

      வேளாண்மை விரிவாக்க மையங்கள் முழுவதுமாக நவீனப்படுத்தப்பட்டு கணினி மயமாக்கப்பட்டுள்ளது. விதைகள் மற்றும் பிற இடுபொருட்கள் இம்மையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு இணையதள ரசீது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வேளாண்மை விரிவாக்க மையத்திலும் 1000 மெ. டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு உள்ளது.
         
1. அரியலூர்
          2. செந்துறை
          3. திருமானூர்
          4. தா.பழூர்
          5. ஜெயங்கொண்டம்
          6. ஆண்டிமடம்

3. துணை வேளாண்மை விரிவாக்க மையங்கள்:

1. கீழப்பழூர் ( திருமானூர் வட்டாரம்)
2. மீன்சுருட்டி (ஜெயங்கொண்டம் வட்டாரம்)
3. விக்கிரமங்கலம் (தா.பழூர் வட்டாரம்)

வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் இடுபொருட்கள் வழங்குதல்:         

          கீழ்க்காணும் இடுபொருட்கள் வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.
           1. நெல், சிறுதானியம், எண்ணெய் வித்துக்கள் மற்றும் பயறு வகைகளின் விதைகள்
           2. தெளிப்பான்கள் (கைத் தெளிப்பான் மற்றும் விசைத் தெளிப்பான்)
           3. உயிர் உரங்கள், நெல், சிறுதானியம், எண்ணெய் வித்துக்கள், பயறு வகைகள், பருத்தி மற்றும்
              கரும்பு பயிர்களுக்கான நுண்ணூட்டச் சத்துக்கள்

4. விதை சுத்திகரிப்பு நிலையம்:

(அ) விதை கிராம திட்டம் 2012-13-ன் கீழ் விதை சுத்திகரிப்பு நிலையம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

          நடுத்தர கொள்ளளவு உள்ள விதை சுத்திகரிப்பு நிலையம் அரியலூர் மாவட்டத்தில் திருமானூர் வட்டாரத்தில் செயல்படுகின்றது. இது வருடத்திற்கு 400 மெ.டன் நெல், சிறுதானியங்கள் மற்றும் பயறு வகைகளின் விதைகளை சுத்திகரிப்பு செய்கிறது. இதில் விதைகளை சுத்தப்படுத்துதலோடு தரம்பிரித்து மிக வேகமாக சுத்திகரிப்பு செய்வதற்கு ( 500 கிலோ / மணிக்கு) தேவையான வேளாண் ரம்ப இயந்திரம் இம்மையத்தில் உள்ளது.

(ஆ) தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் 2014-15-ன் கீழ் புதிதாக இந்நிலையம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

          நடுத்தர கொள்ளளவு உள்ள விதை சுத்திகரிப்பு நிலையம் ஜெயங்கொண்டம் வட்டாரத்தில் ஜெ.தத்தனூரில் செயல்படுகிறது. இது வருடத்திற்கு 400 மெ.டன் நெல், சிறுதானியங்கள் மற்றும் பயறு வகைகளின் விதைகளை சுத்திகரிப்பு செய்கிறது. இதில் விதைகளை சுத்தப்படுத்துதலோடு தரம்பிரித்து மிக வேகமாக சுத்திகரிப்பு செய்வதற்கு ( 500 கிலோஃ மணிக்கு) தேவையான வேளாண் ரம்ப இயந்திரம் இம்மையத்தில் உள்ளது.

5. மண் பரிசோதனை நிலையம்:

          அரியலூரில் ஒரு மண் பரிசோதனை நிலையம் செயல்படுகிறது. மண்ணில் உள்ள சத்துக்களை பரிசோதனை செய்வதற்காகவும் மற்றும் பாசன நீரின் தரத்தை பரிசோதனை செய்வதும் இதன் முக்கிய பணியாகும். இதனால் விவசாயிகள் தங்களுடைய மண்ணின் நிலை, மண் வளம் மற்றும் பாசன நீரின் EC, PH ஆகியவற்றை தெரிந்துகொள்ளலாம். இது அவர்களுக்கு சிறந்த முறையில் உர மேலாண்மை பயிர் தேர்வு மற்றும் பாசன நீர் வேளாண்மைக்கு பொருத்தமாக உள்ளதா என்பனவற்றிற்கு உறுதுணையாக உள்ளது.
 

1. ஒரு மண்மாதிரி பரிசோதனை செய்வதற்கு ரூ.10/-வசூலிக்கப்படுகிறது.
2. ஒரு நீர் மாதிரி பரிசோதனை செய்வதற்கு ரூ.20/- வ
சூலிக்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

முதுநிலை வேளாண்மை அலுவலர்,
மண்பரிசோதனை ஆய்வகம்,
வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம்,
ஜெயங்கொண்டம் சாலை,
வாலாஜாநகரம்,
அரியலூர் - 621 704.

6. திரவ உயிர் உரம் உற்பத்தி மையம்:

          திரவ வடிவிலான உயிர் உரங்கள் நீண்ட நாட்களுக்கு கெடாமலும் எளிதாக பயன்படுத்துவதற்கும் பயிர் வகைகள் வேகமாக உறிஞ்சி எளிதாக எடுத்துக் கொள்வதற்கும் பயன்படுகிறது.
          திரவ உயிர் உரங்கள் உற்பத்தி கூடம் தற்போதைய நவீன தொழில்நுட்பத்துடன் ஜெயங்கொண்டத்தில் கட்டப்பட்டு வருகிறது.

7. பிற வசதிகள்:

           1. வேளாண்மை நிறுவனங்கள்:
                   கிரீடு வேளாண்மை அறிவியல் மையம்
, சோழன்மாதேவி, தா.பழூர்,   உடையார்பாளையம் வட்டம், அரியலூர் மாவட்டம்.

          2. தனியார் நிறுனங்கள்:

                  சர்க்கரை ஆலை: கோத்தாரி சர்க்கரை ஆலை, சாத்தமங்கலம், திருமானூர் வட்டாரம்.

வேளாண்மைத் துறை திட்டங்கள்:

              உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் மத்திய மற்றும் மாநில அரசு பங்களிப்புடன் வேளாண் துறையின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் - தானிய இயக்கம், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் - பயறுவகை பயிர்கள் இயக்கம், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் - எண்ணெய் வித்து இயக்கம், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் - பருத்தி இயக்கம், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் - தென்னங்கன்று வழங்குதல், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் மண் வளத்தை அதிகரித்தல், தென்னை வளர்ச்சி வாரியம், எண்ணெய் வித்து மற்றும் எண்ணெய் பனை தேசிய இயக்கம் - மினி மிஷன் - I எண்ணெய் வித்து, எண்ணெய் வித்து மற்றும் எண்ணெய் பனை தேசிய இயக்கம் - மினி மிஷன் - II எண்ணெய் பனை போன்ற திட்டங்கள் வாயிலாக உயர் விளைச்சல் ரக விதைகள், உயிர் உரங்கள், நுண்சத்துக்கள், பயிர் பாதுகாப்பு பூச்சிக்கொல்லிகள் மற்றும் வேளாண் இயந்திரங்கள்/ கருவிகள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படுகின்றன. தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் வாயிலாக 3.5 சதவீதம் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியடையும் நோக்கில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. விதை கிராம திட்டம் 2008-09 முதல் நெல், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் தானியப் பயிர்களுக்கு விதைகள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

           மாநில அரசின் மூலம் தமிழ்நாடு விதை மேம்பாட்டு கழகம் (டான்சிடா) வாயிலாக தரமான விதைகள் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது. விதை மாற்று விகிதம் நெல் விதைக்கு 33 சதவீதம் பயறுவகைகளுக்கு 25 சதவீதம் மற்றும் எண்ணெய் வித்துக்களுக்கு 15 சதவீதம் வழங்க டான்சிடா மூலம் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
          அட்மா திட்டம்
, 2007-08 முதல் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் விவசாயிகள் பயிற்சி, செயல்விளக்கம், விவசாயிகள் ஆர்வலர்க் குழு அமைத்தல், வேளாண் கண்காட்சி மற்றும் கருத்துக் காட்சி, விவசாயிகள் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் மற்றும் பண்ணைப்பள்ளி போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்கள்:

மாவட்ட அளவில் தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்

வேளாண்மை இணை இயக்குநர்,
வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம்
,
232
, 2வது தளம், அரியலூர் மாவட்ட ஆட்சியரகம்,
ஜெயங்கொண்டம் சாலை
,
அரியலூர் - 621 704.

          தொலைபேசி எண்: 04329-228056

          மின்னஞ்சல் : jdaariyalur@gmail.com

Go to Top

 

மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை

செயல்படுத்தப்பட்டுவரும் நீர்வடிப்பகுதி திட்ட விவரங்கள்

நீர்வடிப்பகுதி


ஒரு வடிகாலில் நிர்ணயிக்கப்பட்ட இடத்திற்கு மழை நீரானது எந்தெந்த இடங்களிலிருந்து வருகின்றதோ, அந்தப் பகுதியையே நீர்பிடிப்புப்பகுதி எனப்படும்.

வ. எண்.

திட்டம்

திட்ட ஆரம்பம்/முடிவு ஆண்டு

செயல்படுத்தப்படும் வட்டாரங்கள்

நீர்வடிப்பகுதி எண்ணிக்கை

1

ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டம் – II

2009-2010 to 2015-2016

திருமானூர்

10

2

ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டம் - V

2010-2011 to 2016-2017

திருமானூர்

4

3

ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டம் - VI

2011-2012 to 2017-2018

தா.பழூர்

5

4

ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டம் - VII

2011-2012 to 2017-2018

தா.பழூர்

5

5

ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டம் - XIV

2014-2015 to 2018-2019

ஆண்டிமடம்

7

6

ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டம் - XV

2014-2015 to 2018-2019

தா.பழூர்

4

கூடுதல்

35

நிதி ஒதுக்கீடு


ஒருங்கிணைந்த நீhவடிப்பகுதி மேலாண்மைத் திட்டம் (பிரதம மந்திரி நீர்பாசனத் திட்டம்) பொதுவழிகாட்டி 2008 நெறிமுறைகளின்படி தனித் தனி நீர்வடிப்பகுதிகளாக பிரிக்கப்பட்ட நீர்வடிப்பகுதிகளுக்கு ஏற்றவாறு ஒரு ஹெக்டருக்கு ரூ.12000/- வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டு கீழ்க்கண்ட திட்ட இனங்களுக்கு ஏற்றவாறு நிதி பகிந்தளிக்கப்படுகிறது.

வ.எண்.

திட்ட இனங்கள்

நிதி ஒதுக்கீடு                  (%) (சதவீதத்தில்)

1

மேலாண்மைப் பிரிவு

 

 

I

நிர்வாகச் செலவினம் (Administration)

10

 

II

கண்காணிப்பு (Monitoring)

1

 

III

மதிப்பீடு செய்தல் (Evaluation)

1

2

தொடக்க நிலை

 

 

I

நுழைவு முகப்புப் பணி (Entry Point Activity)

4

 

II

நிறுவன மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சி (Capacity Building Training)

5

 

III

விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல (Detailed Project Report)

1

3

திட்ட செயலாக்க நிலை

 

 

I

இயற்கை வள மேம்பாட்டுப் பணிகள (Natural Resource Management Works)

56

 

II

பண்ணை உற்பத்தித் திட்டம (Farm Production System)

10

 

III

நிலமற்ற ஏழைகளுக்கான வாழ்வாதாரப் பணிகள (Livelihood Support System)

9

4

நிறைவு கட்ட நிலை (Consolidation Phase)

3

கூடுதல்

100

திட்டத்தின் நோக்கம்


நீர்வடிப்பகுதி திட்டப் பணிகள் தடுப்பணை, கசிவுநீர் குட்டை அமைத்தல், பண்ணைக்குட்டை, புதிய குட்டைகள் அமைத்தல், குட்டை ஆழப்படுத்துதல் ஆகிய பணிகளால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தும் மண் அரிமானம் தடுக்கப்படுவதற்கு முக்கிய ஆதாரமாக திகழ்கிறது. இதனால் வேளாண் உற்பத்தி கணிசமான அளவு உயர்ந்து மக்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்குகிறது. மேலும், சுய தொழில் செய்யும் தொழிலாளி, சுய உதவி குழுக்கள், பயனாளி குழுக்கள், வட்டியில்லா கடன் கொடுப்பது மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தும், வெளி ஊர்களுக்கு செல்லும் மக்களின் நிலை குறைந்தும் வருகிறது. இத்திட்டம் வறட்சியான கிராமங்களுக்கு மக்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது.

1. இயற்கை வள மேம்பாட்டு பணிகள் விவரம்

நிலமேம்பாடு:

 • நிலம் சமன்படுத்துதல்

 • சம உயர வரப்பு அமைத்தல்

 • தடுப்புச்சுவர் அமைத்தல்

 • கோடை உழவு

 • தொடர் குழி அமைத்தல்


 • நீர்வள மேம்பாடு:
 • பண்ணைக்குட்டை அமைத்தல்

 • கசிவுநீர்க்குட்டை அமைத்தல்

 • தடுப்பணை கட்டுதல்

 • கால்நடைக்குட்டை அமைத்தல்

 • வரத்துக் கால்வாய் அமைத்தல் மற்றும் சீர் செய்தல்

 • ஊரணி சீரமைத்தல்

 • கண்மாய் தூர்வாருதல் மற்றும் குடிநீர் தர மேம்பாடு

 •  

  2. பண்ணை உற்பத்தி திட்டம்
  இத்திட்டத்திற்காக 10 சதவிகித நிதி ஒதுக்கப்பட்டு ஒரு பயனாளிஃகுழுவிற்கு அதிகபட்சமாக ரூ.24000 நிதி உதவி அளிக்கப்படுகிறது.
   

 • வேளாண் காடுகள் அமைத்தல்

 • பழமரக் கன்றுகள் வளர்த்தல்

 • சமூக காடுகள் வளர்த்தல்

 • வீட்டுத்தோட்டம் அமைத்தல்
 • தீவனப்பயிர் வளர்த்தல்

 • செயல் விளக்கப்பாத்தி அமைத்தல்

 • மண்புழு உரம் தயார் செய்தல்

 • காளான் உற்பத்தி செய்தல்

 • கால்நடை, கோழிப்பண்ணை அமைத்தல்
 • வேளாண் கருவிகள் வாடகைக்கு விடுதல்
 • 3. சுய உதவிக்குழு மற்றும் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கான வாழ்வாதாரப்பணிகள்

  நீர்வடிப்பகுதிகளில் நிலமற்ற ஏழை மற்றும் விவசாயிகளுக்காக சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டு அக்குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கப்படுகிறது. சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் நிதி வட்டியின்றி தவணை < முறையில் மீளப் பெறப்பட்டு இதர குழுக்களுக்கு சுழற்சி முறையில் வழங்கப்படுகிறது.

 • வட்டியில்லா சுழல்நிதி வழங்குதல்

 • கால்நடை மற்றும் கோழிப்பண்ணை அமைத்தல்

 • கறவை மாடுகள் வளர்த்தல்

 • வேளாண் கருவிகள் வழங்குதல்

 •  

  நிதி ஒதுக்கீடு மற்றும் செலவின விவரம்

                           அலகு : இலட்சம்

  வ. எண்.

  திட்டத்தின் பெயர்

  நிதி ஒதுக்கீடு

  நிதி வரப்பெற்றது

  செலவினம் செய்தது

  நிலுவை

  சதவீதம் (%)

  1

  ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டம் - II (2009-10)

  601.680

  578.622

  566.149

  12.473

  98

  2

  ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டம் - V (2010-11)

  348.000

  312.165

  266.051

  46.114

  85

  3

  ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டம் - VI (2011-12)

  750.000

  420.701

  418.365

  2.336

  99

  4

  ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டம் - VII (2011-12)

  437.400

  262.420

  260.224

  2.196

  99

  5

  ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டம் - XIV (2014-15)

  584.160

  22.727

  21.503

  1.224

  95

  6

  ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டம் - XV (2014-15)

  460.686

  23.081

  22.730

  0.351

  98

  கூடுதல்

  3181.926

  1619.716

  1555.022

  64.694

  96

  நிதிஒதிக்கிடு : மத்திய அரசு 60% மற்றும் மாநில அரசு 40%

  செய்து முடிக்கப்பட்ட பணிகள் விவரம்

  வ. எண்.

  திட்டத்தின் பெயர்

  ஆழ்குழாய் கிணறு மற்றும் சின்டெக்ஸ் டேங்க்  அமைத்தல்

  தடுப்பணை வெளிப்போக்கு அமைத்தல்

  உலர்களம் அமைத்தல்

  குளம் மேம்படுத்துதல்

  1

  ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டம் - II (2009-10)

  10

  95

  15

  70

  2

  ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டம் - V (2010-11)

  7

  70

  0

  30

  3

  ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டம் - VI (2011-12)

  10

  112

  16

  25

  4

  ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டம் - VII (2011-12)

  8

  90

  0

  15

  5

  ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டம் - XIV (2014-15)

  6

  0

  0

  0

  6

  ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டம் - XV (2014-15)

  7

  0

  0

  0

  கூடுதல்

  48

  367

  31

  140

   

  அலுவலக தொடர்புக்கு


  திட்ட அலுவலர்,
  மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை,
  பெரம்பலூர் / அரியலூர்,
  போன் : 04328-225774,
  தொலைப்பேசி எண்: 7402724914.
  மின்னஞ்சல் - powpmb@tn.nic.in
   

  நன்றி.


  Go to Top



  முகப்பு | இணையதளக் கொள்கைகள் | விதிமுறைகளும், நிபந்தனைகளும் | அணுகத்தக்க விருப்பங்கள் | உதவி | கருத்து | தொடர்பு கொள்ள | தள வரைபடம்

  பொருளடக்க உரிமை, பராமரித்தல் மற்றும் மேம்படுத்தல் மாவட்ட நிர்வாகம், அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு