முகப்பு arrow அரசு தொழிற்பயிற்சி நிலையம், ஆண்டிமடம் Print  அச்சிடுக  

அரசு தொழிற்பயிற்சி நிலையம், ஆண்டிமடம்

முகப்பு  |  தொழிற்பிரிவுகள்  |  அலுவலர்கள்  |  நிலைய மேலாண்மைக் குழு  |  சாதனைகள்  |  படங்கள்  |  தொடர்புக்கு

1 2 3

தல வரலாறு

தமிழ்நாட்டிலுள்ள தொழிற்பயிற்சி நிலைங்களில் நமது தொழிற்பயிற்சி நிலையம் 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட்  மாதம் புதியதாக தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது.  திறன் மிக்க தொழிலாளர்களை உருவாக்கும் பொருட்டு ஏற்படுத்தப்பட்டது . தேசிய வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் வழிகாட்டுதலின் படியும் மேலும் தமிழ்நாடு அரசின்  வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழும் செயல்பட்டு வருகின்றது. 14 முதல் 40 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்குக் கைவினைஞர்ப் பயிற்சி அளிப்பதே இதன் நோக்கமாகும்.இத்தொழிற்பயிற்சி நிலையம் ஜெயங்கொண்டம் - விருத்தாசலம் நெடுஞ்சாலையில்  கூவத்தூர் கிராமத்தில் 4.2 ஏக்கர்ப் பரப்பளவில் சொந்தக் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் 5  பொறியியல் பிரிவுகளும் 1 பொறியியல் அல்லாத பிரிவும் உள்ளது . இத்தொழிற்பயிற்சி நிலையம் ஆண்டுதோறும் தொழிற்சாலைகளுக்கு தேவையான திறன் மிக்க தொழிலாளர்களை உருவாக்கித் தருகின்றது .

     மேலும் குறைந்த பட்ச கல்வி தகுதியுடைய  இளைஞர்களுக்கு தமிழ்நாடு திறன் மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் மாலை நேரப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது . இதில்  வீட்டு உபயோக மின்சாதனம் பழுதுப் பார்த்தல் மற்றும் பற்றவைப்பவர் பிரிவிலும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது . அம்மா இரு சக்கர வாகன பழுதுப் பார்த்தல் பிரிவிலும்  பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது .இந்த பயிற்சி வகுப்புகள் மாலை 5  மணி முதல் 8 மணி வரை நடைபெறுகிறது

Go to Top


முகப்பு | இணையதளக் கொள்கைகள் | விதிமுறைகளும், நிபந்தனைகளும் | அணுகத்தக்க விருப்பங்கள் | உதவி | கருத்து | தொடர்பு கொள்ள | தள வரைபடம்

பொருளடக்க உரிமை, பராமரித்தல் மற்றும் மேம்படுத்தல் மாவட்ட நிர்வாகம், அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு